யோகா தின கொண்டாட்டம் –ஈஷா யோகா

சிறை கைதிகளுக்கு யோகா

Advertisement

கோவை

Advertisement

கோவை ஈஷா யோகா மையத்தில் வரும் 21-ம் தேதி 4-வது சர்வதேச யோகா தினம் வெகு சிறப்பாககொண்டாடப்பட உள்ளது. இதில் அதிவிரைவு படை வீரர்கள், எல்லை பாதுகாப்பு படை வீரர்கள்மற்றும் பொதுமக்கள் உட்பட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்று யோகா செய்ய உள்ளனர்.

ஜூன் 21-ம் தேதியை சர்வதேச யோகா தினமாக ஐ.நா சபை கடந்த 2015-ம் ஆண்டு அறிவித்தது.இதையடுத்து, கடந்த 3 ஆண்டுகளாக சர்வதேச யோகா தினத்தை ஈஷா அறக்கட்டளை சிறப்பாககொண்டாடி வருகிறது.

இந்நிலையில், 4-வது சர்வதேச யோகா தினம் வரும் 21-ம் தேதிகொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, ஈஷா அறக்கட்டளை சார்பில் தமிழகம் முழுவதும்
பல்வேறு இடங்களில் யோகா நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

கோவையில் யோகா தின நிகழ்ச்சி 112 அடி ஆதியோகி முன்பு காலை 7.30 மணி முதல் 8.30 மணிவரை நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சியில் அதிவிரைவு படை (Rapid Action Force) துணைகமாண்டர் திரு.சுந்தரகுமார், கொங்குநாடு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் இயக்குநர்திருமதி சி.ஏ.வாசுகி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொள்கின்றேனர்.

மேலும், 400 அதிவிரைவுப் படை வீரர்கள், 150 எல்லை பாதுகாப்பு படை வீரர்கள், ஈஷா வித்யாபள்ளி மாணவர்கள், பொதுமக்கள் உட்பட நூற்றுக்கணக்கானோர் பங்கேற்க உள்ளனர்.

இந்நிகழ்ச்சியில் பங்கேற்கும் அனைவருக்கும் ஈஷா யோகா மையத்தின் பயிற்சியாளர்கள் மூலம்சக்திவாய்ந்த ‘உப-யோகா’இலவசமாக கற்றுக்கொடுக்கப்படும். இந்த உப-யோகாவை தொடர்ந்துசெய்வதன் மூலம் உடல் சோர்வு நீங்கும், மூட்டுகள் மற்றும் தசைகள் வலுபெறும், உடலுக்குபுத்துணர்ச்சி பெறும்.

சிறை கைதிகளுக்கு யோகா

கோவையில் உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் சிறைச்சாலைகளிலும் ஈஷா சார்பில் இலவசயோகா வகுப்புகள் நடத்தப்பட உள்ளன. மன அழுத்தம் மற்றும் தற்கொலை எண்ணங்களில்இருந்து சிறை கைதிகள் விடுபடுவதற்கு யோகா பெரிதும் உதவியாக இருக்கும்.

தொடர்புக்கு: 90435 97080

SHARE
சங்கர மூர்த்தி
தினகரன்,மாலைமுரசு பத்திரிகைகளில் 28 ஆண்டுகள் பணிபுரிந்த மூத்த பத்திரிகையாளர்.செய்திக்கு ...7373141119