2019 ல் உலக முதலீட்டார்கள் மாநாடு-டி.டி.வி.தினகரன் பேட்டி

டி டி வி தினகரன்

0
169
Advertisement

வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டை

Advertisement

எங்கள் தலைமையில் 2019 ல் உலக முதலீட்டார்கள் மாநாடு வெற்றிகரமாக நடத்தப்படும் டி டி வி தினகரன் ராணிப்பேட்டையில் பேட்டி

மக்களின் வாழ்வாதார பிரச்சனை  காவிரி பிரச்சனை உள்ள நிலையில் காவேரி மேலாண்மை அமைக்க முயற்ச்சி செய்யாமல் பொய்களை பேசி வருகின்றனர் ,நீதிமன்ற உத்தரவுப்படி அட்டவணையில் உள்ளது போல் நமக்கு தண்ணீர் கிடைக்க வழி வகை செய்ய வேண்டும் காவிரி நீர் பற்றாக்குறையால் பல மாவட்டங்களில் குடி நீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது

காவேரி மேலாண்மை வாரியம்

மத்திய அரசு காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க 6 வார கால அவகாசம் வழங்கியுள்ளது .

கர்நாடக முதலைமைச்சர் காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க கூடாது என கூறுவது முறையல்ல ,அது நீதிமன்ற தீர்ப்பை அவமதிபாதாகும் ,மத்திய அரசு  தான் தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய தண்ணிரை கிடைக்க வழி   வகை செய்ய வேண்டும்.

இதனை அவசர நடவடிக்கையாக கருதி‌ மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் இதற்கு கர்நாடக அரசும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்
இரண்டு நடிகர்கள் கட்சி துவங்கியுள்ளதைப் பற்றி செய்தியாளர்கள் கேட்டதற்கு .உண்மையில் அதை விட பெரிய நடிகர் யார்  என்றால் ஒ பி எஸ்  தான் ,அவர் தான் தேனியில் மிகப்பெரிய போய் சொல்லியுள்ளார் .

அவர் இதற்கு மட்டும் பதில் சொல்லட்டும் அதிமுக கட்சி பிளவு பட்டு இரட்டை இல்லை சின்னத்தில் நாங்கள் நிற்க முடியாமல் செய்தது யார் என மக்களுக்கு தெரியும் இது தேனி மாவட்ட மக்களுக்கும் தெரியும் பதவி வெறியால் தான் ஒபிஸ் இப்படி நடந்துகொண்டார்.

தம்பி துரை ,ஜெயக்குமார் தங்கமணி

உண்மையில் நாங்களும் என் குடும்பத்தாரும் டார்ச்சர் செய்திருந்தால் அவரை ஏன் அம்மா இறந்த பிறகு முதலமைச்சராக இவரை ஏன் பதவியேற்க சொன்னோம் ,இதிலிருந்தே அவர் பொய் சொல்வது உண்மையாகியுள்ளது

தம்பி துரை ,ஜெயக்குமார் தங்கமணி  உள்ளிட்ட பல அமைச்சர்கள் ஒபிஸ் மீது அதிருப்தி தெரிவித்ததால் தான் அவரை மாற்ற வேண்டிய சுழ்நிலை ஏற்பட்டது ஒபீஸ் க்கு பல பதவிகள் யாரால் கிடைத்தது என அனைவருக்கும் தெரியும் ,என்னிடத்தில் யார் இருந்தாலும் தற்கொலை செய்துகொண்டுப்பார்கள் என தற்போது ஒ பி எஸ் கூறிவருகிறார்.

இப்போதுதான் அந்த நிலையில் உள்ளார் மோடி சொல்லியதால் வந்து சேர்ந்தேன் என ஒ பி எஸ் கூருகிறார் .குருமுர்த்தி மூலம்  அளித்த வாக்குறுதி என்ன வென்றால் ,நீ சென்று எடப்பாடி சென்று சேர்ந்துகொள் உனக்கு துணை முதலமைச்சர் பதவி கிடைக்கும்.

அதன் பிறகு இரட்டை இலை கிடைக்கும் ,பிறகு ஆர் கே நகர் இடை தேர்தலில் உனக்கு சாதகமாக அமையும் என கூறினார் .

இடை தேர்தலில் நான் வெற்றி பெற்றதை அதிகமாக மகிழ்ச்சி அடைந்தவர் எடப்பாடி பழனிசாமிதான் .ஒ பன்னீர் செல்வம் ஒரு தொடை நடுங்கி ,விரக்தியின் விளிம்பில் உள்ளார்,அதனால் பொய் சொல்லி வருகிறார்,எனவே ஒ பி எஸ்  மீதும் இவருடைய மகன் மீதும் வழக்கு வரும் என்ற நோக்கில் பாஜகவின் ஏஜென்டாக செயல்பட்டு வருகிறார்.

முதலைமைசராக ஆகுவேன்

இந்திய நாட்டில் எவ்வளவோ பிரச்சனைகள் உள்ளன அதியெல்லாம் விட்டுவிட்டு இவர் அதிமுகவுடன் சேர வேண்டும் என பிரதமர் கூற வேண்டிய அவசியமென்ன .

தற்போது பாஜக இவர்களை கைவிட்டு விட்டார்கள்
நான்முதலமைச்சராக 234 தொகுதி மக்கள் விரும்பினால் நான் முதலைமைசராக ஆகுவேன் ,எங்கள் எம் எல் ஏக்களை தகுதி நீக்கம் செய்தார்கள் அதன் பிறகு நீதிமன்றம் சென்றோம்  திமுகவும் சென்றார்கள்

அப்போது நீதிபதிகள் தகுதி நீக்கம் தொடர்பான தகவலை தெரிவித்த பிறகுதான் சட்டமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்த வேண்டும் ,எனவே நீதிமன்ற தீர்ப்பு தள்ளி போவதால் எடப்பாடிஆட்சிசென்றுகொண்டிருக்கிறது ,நீங்கள் தேர்தலில் தனித்து போட்டியிடுவீர்களா அல்லது நடிகர்களுடன் போட்டிஇடுவீர்களா என செய்தியார்கள் கேட்டதற்கு ,அவர் எல்லாம் எங்களிடத்தில் வந்தால் ஏற்றுக்கொள்வோம் .

வரும் 6 மாத காலத்தில் ஆட்சி மாறும் என ஸ்டாலின் கூறியுள்ளரே என செய்தியாளர்கள் கேட்டதற்கு எடப்பாடிக்கும் ஒ பி எஸ்க்கும் ஆசை இருக்கும்போது ஸ்டாலின் ஆசை படுவதில் தவறில்லை .2019 உலக முதலீட்டார்கள் மாநாடு நடத்தப்படும் என ஒ பி எஸ் சும் எடப்படியும் சொல்கிறார்களே என கூறுகிறார்களே என கேட்டதற்கு 2018  ல்  தேர்தல் வரும் நாங்கள் தான் வெற்றி பெறுவோம்.

எங்கள் தலைமையில் 2019 ல் உலக முதலீட்டார்கள் மாநாடு வெற்றிகரமாக நடத்தபடும் என அவர் கூறினார்.

SHARE
Rj suresh
வேலூர்