அட்டையில் அற்புத படைப்பு…..அசத்தும் நடராஜன்..

பெரியார் ,காந்தி ,தாஜ்மஹால்

0
70
Advertisement

உலகிலேயே அட்டையால் செய்யபட்ட முதல் உருவ படமான லிங்கோத்பவர் சிலை !

விழுப்புரம் மாவட்டம்

கள்ளக்குறிச்சி அருகே உள்ள ராஜா நகர் பகுதியை சேர்ந்தவர் நடராஜன் .இவர் எலக்ட்ரீஷியன் வேலை செய்து வருகிறார் .இந்த நிலையில் இவர் சிறு வயதில் இருந்தே அட்டையால் பெரியார் ,காந்தி ,தாஜ்மஹால் .திருவள்ளுவர் போன்ற சிலை செய்து வந்துள்ளார்.

திருவள்ளுவர் சில 1986 வி வி சிங் கிற்க்கு அட்டையால் செய்த திருவள்ளுவர் சிலையை பரிசாக அளித்தார். ஆனால் முதல் முறையாக உலகளத்திலேயே யாரும் செய்ய முடியாத ஒரு செயலை செய்ய வேண்டும் என்ற முயற்ச்சியால் அட்டையால் லிங்கோத்பவர் சிலையை செய்ய ஒரு முயற்சியை எடுத்தார்.

சுமார் 74 நாட்கள் இந்த சிலையை முதல் அட்டைகளை கொண்டு வடிவமைத்து பிறகு அதனை சரியாகவும் அதன் வடிவமைப்புகளை கொண்டு செய்யும் பணியில் தனி ஒரு நாராக ஈடுபட்டு வந்தார் .

இந்த நிலையில் மரத்தால் செய்ய கூடிய சிலைகளும் ,கலைஞர்களும் பலர் இருந்தாலும் இது போல அட்டையால் செய்யபட்ட உலகத்திலேயே முதல் முரையாக உள்ளது மேலும் அவர் செய்யபட்ட சிலையானது அனைத்து சிவன் கோயில்களிலுமமிருக்க கூடிய பஞ்ச மூர்த்திகளில் ஒருவரான லிங்கோத்பவர் சிலை .

இச்சிலையானது இதுவரையில் கூகுல் போன்ற என்ற இடத்திலும் இதன் உருவத்தை வரைய முடியாத மற்றும் கான முடியாமல் இருந்தது அதனை இவர் அழகிய உருவத்துடன் அருமையாக அட்டையில் செதுக்கியுள்ளார்.

மேலும் ஒரு சிலையை செய்ய வேண்டும் என்றால் அது எப்படி இருக்க வேண்டும் என

விதிமுறைகளும் அத்தனை விதிமுறைகளையும் அகதாசங்களில் குறிபிட்டுள்ளது போலவும் இச்சிலையை வடிவமைத்துள்ளார் சுமார் 8 அடி உயரம் கொண்ட இந்த சிலையானது அழகிய தோற்றத்துடன் தண்ணீரால் ஓவியம் தீட்ட கூடிய வண்ணங்கள் பூசபட்ட்டு அதனை அற்புதமாக உருவாக்கியுள்ளார்

.இது போல அட்டைகளால் செய்யபடும் சிலைகளை ஒரு குடிசை தொழிலாக ,மகளிருக்கும் ,தண்டனைகள் பெற்று சிறையில் உள்ளவர்களுக்கும் பயிற்ச்சி அளிக்கபட்டால் இது போல தொழில் வளம் பெருக வாய்பபாக இருக்கும் என நடராஜன் தெரிவித்துள்ளார்.மேலும் மர சிற்ப்பத்தால் செய்த சிலைகளை தாண்டி அட்டையால் செய்யபட்ட இந்த சிலை கின்னஸ் சாதனையில் இடம் பெற வேண்டும் என பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோறிக்கை விடுத்துள்ளனர்

செய்திகள் :- கள்ளக்குறிச்சி சித்ரா

Advertisement
SHARE