அரசு பேருந்தில் “வைபை” வசதி! அசத்திய திருச்சி கண்டக்டர்!

0
134
அரசு பேருந்தில்
Advertisement

அரசு பேருந்தில் “வைபை” வசதி! அசத்திய திருச்சி கண்டக்டர்!

Advertisement

ராமநாதபுரம் பறநகர் போக்குவரத்து கிளையில் இருந்து 80க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

இதில், ராமநாதபுரம் பஸ் ஸ்டாண்டில் இருந்து மதியம் 2:20 மணிக்கு, பரமக்குடி, மானாமதுரை,

மதுரை வழியாக தஞ்சாவூருக்கு டி.என் : 63 என்.1710 என்ற பஸ் இயக்கப்படுகிறது.

இதன் கண்டக்டராக திருச்சியை சேர்ந்த எம்.ஜெயபாலாஜி(28), பணியாற்றுகிறார், பயணிகளை கவரவும்,

அதனால் போக்குவரத்து கழகத்திற்கு வருவாய் அதிகரிக்கவும் இவர் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளார்.

இதற்காக, தனது சொந்த பணத்தில் 10,000 ரூபாய் செலவில், தனியார் பஸ்களுக்கு இணையாக,

அரசு பஸ்ஸில் கலர் கலர் ஸ்டிக்கர்களை ஒட்டி பயணிகளை கவர்ந்தார். இதனால் பயணிகள் இவரது பேருந்தை எதிர்பார்த்து காத்திருக்க துவங்கினர்.

இதனைத் தொடர்ந்து, 5,000 ரூபாய் செலவில் “இலவச வைபை வசதி” செய்துள்ளார்.

இதற்காக பயணிகள் அவரை பாராட்டுவதோடு, இலவச வைபை வசதியை பெறுகின்றனர்.

ஜெயபாலாஜி தமிழ் செய்திகாக அளித்த பேட்டியில்.,

“இது, ஒரு சிறிய முயற்சி தான் இன்னும் பல்வேறு நல்ல விசயங்களின் மூலம் அரசு போக்குவரத்து கழகத்திற்கு வருவாய் ஈட்டுவேன்,

பொதுவாக அரசு பேருந்து குறித்து மக்கள் குறை கூறுகிறார்கள், அந்த எண்ணத்தை மாற்ற வேண்டும் என நினைத்தேன்.

இதற்காக தனியார் பஸ்களுக்கு இணையாக வண்ண வண்ண ஸ்டிக்கர்களை ஒட்டி ஓராண்டுகளுக்கு முன் அலங்கரித்தேன். அரசு பேருந்தில் “வைபை” வசதி! அசத்திய திருச்சி கண்டக்டர்!

இதற்கு பயணிகளிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

தற்போது, பஸ்ஸில் அனைவரும் இலவசமாக இணையசேவை பெறும் வகையில், வைபை வசதி செய்து கொடுத்துள்ளேன்.

புறநகர் போக்குவரத்து கழக மேலாளர் தேவேந்திரன் இதனை பாராட்டி ஆதரவு தெரிவித்தார்.

இலவச வைபை குறித்து பஸ்சின் முன்புறம் ஒட்டப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து பயணிகள் வருகை அதிகரித்து உள்ளது, மகிழ்ச்சி அளிக்கிறது என்றார்.”

தமிழகத்தில் முதன்முறையாக, அரசு பேருந்தில் தனது சொந்த செலவில் இலவச வைபை வசதி ஏற்படுத்திய கண்டக்டர் ஜெயபாலாஜியை நாமும் பாராட்டுவோமே…  96267 32183.

செய்திகள் :- பரமக்குடி முத்துக்குமார்

SHARE