எந்த எண்ணெய்…? நல்ல எண்ணெய்…?

விளம்பரங்களைப் பார்த்து எண்ணெய் வாங்குவதைத் தவிர்க்க வேண்டும்

Advertisement
Advertisement

நம் முன்னோர்கள் பயன்படுத்தி வந்த கடலை எண்ணெய், நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய்தான் எப்போதுமே பாதுகாப்பானவை.

நம் மாநில வெப்ப நிலைக்கும், நம் வாழ்க்கை முறைக்கும் இந்த 3 வகை எண்ணெய்கள் தான் ஆரோக்கியமானவை.

இன்று கடைகளில் விற்பனையாகி வரும் எல்லா எண்ணெய்களுமே சந்தேகத்தை உருவாக்குபவையாக உள்ளது.காரணம் அந்த எண்ணெய்களில் சேர்க்கப்பட்டுள்ள மூலப்பொருள்களின் பெயர்களை வெளிப்படத் தன்மை இல்லாமல் வினோதமான வார்த்தைகளில் அச்சிட்டு இருப்பதே.

இது ஒரு வகையான விஞ்ஞானப்பூர்வமான விளம்பர மோசடி…! என்றால் மிகையாகாது.

சரி எந்த எண்ணெயைத்தான் வாங்குவது?

Refine, Bleach, Deodorised இந்த மூன்று விஷயங்களும் ஒரு எண்ணெயில் இருக்கக் கூடாது.

எந்த உணவுப்பொருளாக இருந்தாலும் அது குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் கெட்டுப் போய்விடும்.

அதுதான் இயற்கையின் விதி…!

அதனால் ஒரு பொருளின் வாழ்நாளை நீட்டிப்பதற்காக செய்யப்படும் வேதிவினை தான் Refine. அடுத்து Bleach என்பது.

எண்ணெயை சுத்தமாகத் தண்ணீர் போல காட்டுவதற்காக செய்யப்படும் வேதிவினை கலப்பு.

அடுத்து எண்ணெய் நமக்குப் பிடித்த வாசனையில் இருக்க வேண்டும் என்பதற்காக எண்ணெயின் நிஜமான மணத்தை மாற்றி வேதிப் பொருட்களைக் கலக்கும் முறை.

மேலும் எண்ணெய் வித்துகளே இல்லாமல் வேறும் “மினரல் ஆயில்” கொண்டு வாசனை எஸென்ஸ் (Essence) கலந்து தேவைப்படும் எண்ணெய் வகைகளை உற்பத்தி செய்யப்பட்டு அவைகள் தாராளமாக சந்தையில் விற்பனையில் உள்ளது

மினரல் ஆயில்

“மினரல் ஆயில்” க்குருடாயில் எனும் கச்சா எண்ணெயை சுத்திகரித்து பெட்ரோல், டீசல், கெரசின், நாப்தலீன், மெழுகு மற்றும் ரோட்டுபோட எடுக்கும் தார் வரை 24 வகைப் பொருட்கள் பிரிக்கப்பட்டு எஞ்சியிருப்பது தான் “மினரல் ஆயில்’.

இதில் பெட்ரோலியப்  பொருட்களின் ஆக கழிவு பொருளே மினரல் ஆயில் என்னும் அமெரிக்க மண்ணெண்ணெய்  என்னும் லிக்யுட்  பேரபின்  ஆகும்.

மண்ணெண்ணெய் இதை இப்படியும் சொல்வார்கள்”சீமை எண்ணெய் என்று சீமெண்ணெய்” இதற்கு நிறமோ, மணமோ கிடையாது.”மினரல் ஆயில்” அடர்த்தி அதிகம் கொண்டிருக்கும்.

எந்த வகை எண்ணையுடனும் எளிதாக கலப்படம் செய்து விடலாம் .
(இந்த மினரல் ஆயில் பற்றி விக்கிபீடியாவின் விளக்கம்)

நல்ல தரமான எண்ணெய் கொஞ்சம் கெட்டியாகத்தான் இருக்கும்.
தண்ணீர் போல இருக்காது. பளிச்சென்று சுத்தமாகவும் இருக்காது.

கடலை எண்ணெய் என்றால் அதன் வாசனை கொஞ்சமாவது இருக்கும்.
வித்தியாசமான நறுமணம் எதுவும் இருக்காது. இந்த 3 விஷயங்களையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

முக்கியமாக, விளம்பரங்களைப் பார்த்து எண்ணெய் வாங்குவதைத் தவிர்க்க வேண்டும். எல்லாப் பொருட்களுக்குமே இது பொருந்தும். எண்ணெயைப் பொறுத்தவரை குடும்ப நல மருத்துவரிடமோ, இதய சிகிச்சை மருத்துவரிடமோ ஆலோசனை கேட்டுத் தேர்ந்தெடுப்பது இன்னும் பாதுகாப்பானது

SHARE
சங்கர மூர்த்தி
தினகரன்,மாலைமுரசு பத்திரிகைகளில் 28 ஆண்டுகள் பணிபுரிந்த மூத்த பத்திரிகையாளர்.செய்திக்கு ...7373141119