வேம்பு… பால் வடியும் அதிசயம்…

வேம்பு... பால் வடியும் அதிசயம்...

Advertisement
Advertisement

இயற்கையின் அதிசயங்கள் எல்லாம் இறவன் செயல் என்பதலே….! நமது முன்னோர்கள் இயற்கையின்மீதான பக்தியை பயம் கலந்தமரியாதையுடன் வணங்கி பூஜித்தனர்.

அந்த வகையில் உச்சி முதல் அடிநுனி ஆணி வேர்வரை ஒட்டு மொத்தமாக மருத்துவத் தன்மையை மனித குலத்துக்கு வழங்கிவரும் வேம்பு… எனும் வேப்பமரத்தை பூஜித்து வணங்குவது தவறில்லை என்பது ஆன்மீக அறிஞர்களின் மரியாதையான கருத்து.

கோவை அடுத்துள்ள மலுமச்சம்பட்டியில் கடந்த இரண்டு தினங்களாக அங்குள்ள வேப்பமரத்தில் சுவையான பால் வடிந்தது.

இதோ போல் குடியாத்தம் காட்பாடி ரோட்டில் உள்ள அர்ஜீனாபுரம் அடுத்த மேல்புதூர் கிராமத்தில் கடந்த மூன்று நாட்களாக அக் கிராமத்தில் உள்ள ஒரு வேப்பமரத்தில் மரத்தின் நடுவில் இருந்து பால் வடிகிறது.

இதனை அப்பகுதி மக்கள் ஆச்சர்யத்துடன் பார்க்கிறார்கள் அத்துடன் சுற்று வட்டார கிராமத்தில் இருந்தும் மக்கள் கூட்டம் கூட்டமாக சென்று பார்த்து வணங்கி வருகிறார்கள் இதனிடையே அப்பகுதி மக்கள் வேப்பமரத்துக்கு பூஜை செய்து வழிபட்டு வருகின்றனர்.

இது குறித்து தாவரவியல் ஆய்வு கூறுவது:-

வேப்பமரத்தில் இப்படி பால் வடிவதற்கு  இந்த மரத்தில் உள்ள மாவுச் சத்தை (ஸ்டார்ச்சை) வேப்பமர இலைகள் சர்க்கரையாக மாற்றுகின்றன. வேப்ப மரப் பட்டையின் அடிப்பகுதியில் புளோயம் என்ற திசு இருக்கிறது. இந்தத் திசு வழியாக சர்க்கரையாக மாற்றப்பட்ட மாவுச் சத்து வரும்போது, அது பாலாக இருக்கிறது.

எல்லா வேப்பமரத்திலும் இப்படிப் பால் வருவதில்லை.

இந்த மரத்தில் இந்தத் திசு பாதிக்கப்பட்ட காரணத்தால் இப்படிப் பாலாகக் கொட்டுகிறது. தேவையைவிட மரத்தில் உள்ள தண்ணீரின் அளவு அதிகமாகும்போது, பட்டையின் அடிப்பகுதியில் உள்ள திசு பாதிக்கப்பட்டு, அதன் வழியாகப் பாலாகக் கொட்டுகிறது. மரத்தில் தண்ணீரின் அளவு குறையும்போது, திசு அடைபட்டு, இனிப்புப் பால் வடிவதும் நின்று போகும்” என்பதே….!