ரிலையன்ஸ் ஜியோ மீது புகார் அளித்த வோடபோன்..!

38
462
ரிலையன்ஸ் ஜியோ மீது புகார் அளித்த வோடபோன்..!
Advertisement

ரிலையன்ஸ் ஜியோ மீது புகார் அளித்த வோடபோன்..!

Advertisement

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் சமீபத்தில் அறிவித்துள்ள செல்போன் திட்டத்தால் இத்துறை கடுமையாக பாதிக்கப்படும் என்றுரிலையன்ஸ் ஜியோ மீது புகார் அளித்த வோடபோன்..!

வோடபோன் நிறுவனம் தொலைத் தொடர்பு அமைப்பான டிராயிடம் புகார் மனு அளித்துள்ளது.

ஜியோ அளித்த இலவச அழைப்புகள் திட்டத்தால் பிற போட்டி நிறுவனங்கள் கடுமையான நெருக்குதலுக்கு உள்ளாகியுள்ளன.

இந்நிலையில் இலவச அழைப்பு, செல்போன் திட்டத்தையும் செயல்படுத்த உள்ளது. இதை தடுப்பதன் மூலம் தான் இத்துறையை காக்க முடியும் என்று,

வோடபோன் நிறுவனம் தொலைத் தொடர்பு ஆணைய நிதித்துறை உறுப்பினர் அனுராதா மித்ராவிடம் புகார் மனு அளித்துள்ளது.

அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது :

தங்களது நிறுவனம் தொடர்ந்து வருவாய் இழப்பை சந்தித்து வருகிறது.

ஜூன் மாதத்துடன் முடிவடைந்த நடப்பு நிதி ஆண்டின் முதல் காலாண்டில் 3.41 சதவீத வருவாய் குறைந்துள்ளது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அலைக்கற்றை (ஸ்பெக்ட்ரம்) பயன்படுத்துவதற்கு அரசுக்கு செலுத்தும் தொகை தாமதமாக செலுத்தினால்,

அதற்கு அபராத வட்டி விதிப்பதை தவிர்ப்பதன் மூலம்தான் இத்தொழிலில் பிற நிறுவனங்கள் நிலைத்திருக்க முடியும் என்றும்,

இத்துறையில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களின் வருவாய் தொடர்ந்து சரிந்து வருகிறது.

இதனால் அலைக்கற்றை தொகையை செலுத்துவது பெரும் சுமையாக உள்ளதாகவும் அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளது.

SHARE