வோடாபோனிற்கு வரி விதித்த வருமானவரி துறை..!

50
475
வோடாபோனிற்கு வரி விதித்த வருமானவரி துறை..!
Advertisement

வோடாபோனிற்கு வரி விதித்த வருமானவரி துறை..!

Advertisement

வரிநிலுவை செலுத்த தாமதித்த காரணமாக வோடபோன் நிறுவனத்துக்கு வருமான வரித்துறை ரூ.7,900 கோடி அபராதம் விதித்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

ஹாங்காங் பங்குச் சந்தைக்கு வோடபோன் தெரிவிக்கையில் இதன் கிளையான ஹட்கின்சன் டெலிகம்யூனிகேஷன் நிறுவனம்,

கடந்த ஆண்டு ரூ.7,900 கோடி வரி செலுத்துமாறு நோட்டீஸ் பெற்றது என்றும் ஆகஸ்ட் 9-ம் தேதி இதே தொகைக்கு அபராத உத்தரவையும் பெற்றதாகக் கூறியுள்ளது.

ஆனால் இந்த வரிவிதிப்பு செல்லுபடியாகுமா என்பதை வோடபோன் பரிசீலித்து வருகிறது.

ரூ.16,430 கோடி வர்த்தக நடவடிக்கைகளின் மூலம் பெற்ற ரூ.16,430 கோடி மூலதன லாபம் மீது ரூ.7,900 கோடி வரி விதித்து,

அதற்கான நோட்டீஸை வருமான வரித்துறை ஜனவரி 25-ம் தேதி அனுப்பியது.

தற்போது இதே தொகைக்கு அபராதம் விதித்து நோட்டீஸ் அனுப்பியுள்ளது வருமான வரித்துறை.

தற்போது சிக் ஹட்கின்சன் நிறுவனத்தின் ஒரு பகுதியாக விளங்கும் ஹட்கின்சன் வாம்ப்பா நிறுவனத்திடமிருந்து வோடபோன் நிறுவனம் 2007-ம் ஆண்டு 67% பங்குகளை வாங்கியது.

இதன் மூலதன லாபம் மீது முந்தைய காலக்கட்டத்தையும் இணைத்து வருமான வரித்துறை வரி விதிப்பு செய்துள்ளது.

இவ்வாறு முந்தைய காலக்கட்டத்தையும் கணக்கிலெடுத்துக் கொண்டு வரிவிதிப்பு செய்வது,

சர்வதேச வர்த்தக விதிமுறைகளுக்குப் புறம்ப்பானது என்று வோடபோன் நிறுவனம் வழக்காடி வருவது குறிப்பிடத்தக்கது.

SHARE