உருவத்தை கிண்டல் செய்யாத தனுஷ்: வித்யூலேகா ராமன் நெகிழ்சி

0
136
வித்யூலேகா
Advertisement
Advertisement

பிரபல குணசித்ர நடிகர் ராமனின் மகள் வித்யூலேகா.

கல்லூரி காலத்திலிருந்து நாடகத்தில் நடித்தும், இயக்கியும் வந்த வித்யூலேகாவை நீ தானே என் பொன் வசந்தம் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகப்படுத்தினார் கவுதம் மேனன்.

அதன் பிறகு சந்தானம் உள்ளிட்ட காமெடியன்களுக்கு ஜோடியாக நடித்தார். தற்போது தெலுங்கிலும் பிசியான காமெடி நடிகையாகிவிட்டார்.

தற்போது அவர் தனுஷ் இயக்கி, தயாரிக்கும் பவர் பாண்டி படத்தில் கிராமத்து பெண்ணாக நடிக்கிறார். இதுகுறித்து வித்யூலேகா கூறியதாவது:

நான் இதுவரை நிறைய படங்களில் நடித்து விட்டேன். என்றாலும் பவர் பாண்டி எனக்கு ஸ்பெஷலான படம்.

கொஞ்சம் மார்டன் உடை அணிந்திருந்தால், சிவப்பாக இருந்தால் கிராமத்து கேரக்டர்களில் நடிக்க வைக்க தயங்குவார்கள்.

நான் இதுவரை நடித்தது எல்லாமே நகரத்து கேரக்டர்கள்தான். தனுஷ் சார் என்னை துணிச்சலுடன் கிராமத்து கேரக்டரில் நடிக்க வைத்துள்ளார்.

நான் நடிக்கும் படங்களில் எனது உருவத்தை வைத்து ஒரு காமெடி காட்சியாவது இருக்கும். இந்தப் படத்தில் அப்படி ஒரு காட்சி வையுங்களேன் என்ற தனுஷ் சாரிடம் கேட்டேன்.

உருவத்தை கிண்டல் செய்யும் காட்சிகளை ஒரு போதும் வைக்க மாட்டேன். அது நாகரீகமல்ல என்றார். அவரது இந்த பதில் என்னை நெகிழ வைத்து விட்டது என்கிறார் வித்யூலேகா ராமன்.

 

SHARE