வருகிறான் விஜய் சேதுபதியின் கருப்பன்..!

219
777
வருகிறான் விஜய் சேதுபதியின் கருப்பன்..!
Advertisement

வருகிறான் விஜய் சேதுபதியின் கருப்பன்..!

Advertisement

தணிக்கையில் ‘யு’ சான்றிதழ் கிடைத்ததைத் தொடர்ந்து, செப்டம்பர் 29-ம் தேதி வெளியாகவுள்ளது விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியிருக்கும் ‘கருப்பன்’.

ஏ.எம்.ரத்னம் தயாரிப்பில் பன்னீர்செல்வம் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் ‘கருப்பன்’.

விஜய் சேதுபதி, தான்யா, பாபி சிம்ஹா உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இப்படத்துக்கு இமான் இசையமைத்திருக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவுற்று, இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வந்தது.

அனைத்து பணிகளும் முடிவடைந்தவுடன், தணிக்கைக்கு விண்ணப்பித்தார்கள்.

தணிக்கையில் ‘யு’ சான்றிதழ் கிடைத்ததைத் தொடர்ந்து, செப்டம்பர் 29-ல் வெளியாகும் என படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது.

‘கருப்பன்’ பணிகள் முடிவடைந்ததைத் தொடர்ந்து, ப்ரேம் குமார் இயக்கத்தில் உருவாகும் ’96’ படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் விஜய் சேதுபதி.

SHARE