நல்ல மருந்து…..! நம்ம நாட்டு மருந்து….! சங்கரமூர்த்தியின் மருத்துவ சிந்தனைகள்…! பகுதி 8

50
543
நல்ல மருந்து…..! நம்ம நாட்டு மருந்து….! சங்கரமூர்த்தியின் மருத்துவ சிந்தனைகள்…! பகுதி 8
Advertisement

நல்ல மருந்து…..! நம்ம நாட்டு மருந்து….! சங்கரமூர்த்தியின் மருத்துவ சிந்தனைகள்…! பகுதி 8

Advertisement

வெட்டி வேர்

வெட்டி வேரை நன்கு உலர்த்தி பொடிசெய்து கொண்டு 200 மி.கி. முதல் 400 மி.கி. அளவு எடுத்து நீரில் ஊறப்போட்டு அந்த ஊறல் நீரை,

30 மி.லி. முதல் 50 மி.லி. அளவு குடித்து வந்தால் காய்ச்சல் மற்றும் வயிற்றில் ஏற்படும் நோய்கள் கட்டுப் படும்.

வெட்டிவேர்  சிறு துண்டுகளாக வெட்டி அதனுடன் ஒரு டீஸ்பூன் கடுக்காய்  பொடியை சேர்த்து இந்த இரண்டையும் முதல்நாள் இரவே சுடுநீரில் ஊறவைக்கவும்.

மறுநாள் அவற்றை அம்மியில் அரைத்து, அந்த விழுதை பருக்கள் மீது முழுவதுமாக மறைப்பதுபோல் தடவுங்கள்.

ஒரு நாள் விட்டு ஒருநாள் இப்படிச் செய்து வந்தாலே பருக்கள் உதிர்ந்துவிடும். பருக்கள் இருந்த வடுவும் தெரியாது .

பச்சைப்பயறு(100 கிராம்) , வெட்டிவேர்  சிறுசிறு துண்டுகளாக்கியது (50 கிராம் )இந்த இரண்டையும் சேர்த்து நன்றாக அரைக்கவும்.

இந்தப் பவுடரை உடலுக்குத் தேய்த்துக்  தினமும் இப்படி குளித்து வந்தாலே சிறு கட்டிகளும் வரிகளும் ஓடிப் போகும். சருமமும் மிருதுவாகும்.

வெட்டிவேர்( 100 கிராம்) , வெந்தயம்(100 கிராம்) இரண்டையும் சீயக்காய் மெஷினில் கொடுத்து அரைத்து வைத்துக் கொள்ளுங்கள்.

எண்ணெய் தேய்த்து குளிக்கும் போதெல்லாம் சீயக்காய்க்குப் பதில் இந்த பவுடரை பயன்படுத்துங்கள்.

தொடர்ந்து இதைச் செய்துவந்தால் முகத்தில் எண்ணெய் வழியாது. அதோடு உங்கள் கூந்தலின் நறுமணத்தால் ஏரியாவே  மணமணக்கும்.

வெட்டிவேர், ரோஜா மொட்டு, மகிழம்பூ, செண்பகப்பூ, சம்பங்கி விதை..இவற்றை சம அளவு எடுத்து,

மெஷினில் கொடுத்து அரைத்துக் கொள்ளுங்கள் (இவற்றை எவ்வளவுதான் அரைத்தாலும் திப்பி திப்பியாக இருக்கும்.

இதை நன்றாக சலித்து, நைஸான பவுடரை மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள்). இந்தப் பவுடரை தண்ணீரில் குழைத்து,

முகத்தில் பூசி, கழுவி வந்தால் வெட்டிவேர் முகத்தில் உள்ள எண்ணெய் பசையை எடுத்துவிடும்.

சம்பங்கி விதை முகத்துக்கு புத்துணர்ச்சியை கொடுக்கும். சோர்வைப் போக்கி நிறத்தைக் கொடுக்கிறது ரோஜா மொட்டு.

மகிழம்பூவும், செண்பகப்பூவும் வியர்வை நாற்றத்தைப் போக்கி வாசனையை கொடுக்கிறது. சருமம் மிருதுவாகும்.

SHARE