வேலூர் திருமலைக்கோடி சக்தி நாராயணி பீடம் சக்தி தபால் தலை வெளியீடு

நீதிபதி தமிழ்வாணன்

0
182
Advertisement
Advertisement

வேலூர் திருமலைக்கோடி சக்தி அம்மா ஜெயந்தி விழா.

தபால் தலை வெளியீடு

வேலூர் மாவட்டம்  திருமலைக்கோடி ஓம் சக்தி நாராயணி பீடம் சக்தி அம்மாவின் 42வது ஜெயந்தி விழா  நடைபெற்றது.

விழாவையொட்டி காலை 5:00 மணிக்கு நாராயணி மூலமந்திரம் யாகம் நடைபெற்று  காலை 9:00 மணிக்கு நாராயணி பக்தர்களின்  சீர்வரிசை பொருட்களுடன் ஊர்வலமாக சென்று சக்தி அம்மனுக்கு காணிக்கையாக செலுத்தினர்

.காலை 11:30 மணிக்கு சக்தி அம்மாவின் 42வது ஜெயந்தி விழாவை அடுத்து  சக்தி அம்மாவுக்கு வெளிநாட்டு பக்தர்கள் பாத பூஜை செய்தனர். தொடர்ந்து  பக்தர்கள் சக்தி அம்மாவுக்கு   மலர் அஞ்சலி செய்தனர்.

இவ்விழாவில் கலவை சச்சிதானந்த சுவாமிகள், வாலாஜாபேட்டை தன்வந்திரி ஆரோக்கிய பீடம் முரளிதர சுவாமிகள், கோவை காமாட்சிபுரம் ஆதீனம் சிவலிங்கேஸ்வர சுவாமிகள், திருவலம் சாந்தா சுவாமிகள். 

சென்னை உயர்நீதிமன்ற  முன்னால் நீதிபதி தமிழ்வாணன், வேலுார் மாவட்ட கலெக்டர் ராமன், ஆந்திர மாநிலம் புங்கனுார் எம்.எல்.ஏ., பெத்தரெட்டி ராமச்சந்திரரெட்டி,  திருமலை – திருப்பதி தேவஸ்தானம் முன்னாள் தலைவர் சதலவாடா கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.

பின்னர் வேலூர் அஞ்சல் துறை கண்காணிப்பாளர் விஜயா சக்தி அம்மாவின் உருவம் பதித்த  5 ரூபாய் தபால் தலை வெளியிட்டார். இவ்விழாவில் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் உள்ள ஆன்மீக பக்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.