வேலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் நடப்பாண்டு அரவை துவக்கினார் கலெக்டர்

வேலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் நடப்பாண்டு அரவை துவக்கினார் கலெக்டர்

0
74
Advertisement

வேலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் நடப்பாண்டு அரவையை துவக்கினார் கலெக்டர்

ராணிப்பேட்டை திருவலம் அருகே அமைந்துள்ள வேலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் நடப்பு ஆண்டு அரவையை கலெக்டர் ராமன் நேற்று துவக்கி வைத்தார்.

நிகழ்ச்சிக்கு சர்க்கரை ஆலை மேலாண்மை இயக்குனர் தீபக் ஜெக்கப் தலைமை வகித்தார், நிர்வாகக்குழு தலைவர் குமார், ஆகியோர் முன்னிலை வகித்தனர், இதில் கலெக்டர் ராமன் பங்கேற்று, கரும்பு கட்டுகளை கன்வேயரில் செலுத்தி அரவையை துவக்கி வைத்தார் .

நடப்பு ஆண்டின் இலக்கு:

நடப்பு ஆண்டில் 1.15 லட்சம் டன் கரும்பு அரவை செய்து ஒரு லட்சம் டன் சர்க்கரை உற்பத்தி செய்வதற்கு இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

மேலும், நாளொன்றுக்கு 15 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யவும், அதில்நான்கு மெகா வாட் ஆலைக்கு பயன்படுத்தவும், மீதம் உள்ள 11 மெகா வாட் மின்சாரத்தை தமிழ்நாடு மின்சாரத்துறைக்கு கொடுக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாக நிர்வாக இயக்குனர் தெரிவித்தார்.

விழாவில், அலை கண்காணிப்பாளர் வேலு, மேலாளர் சுப்பிரமணி, ரசாயண அலுவலர் செங்குட்டுவன், கரும்பு பெருக்கு அதுவலர் விவே கானந்தன், நிர்வாகக் குழு உறுப்பினர்கள் சேட்டு, அருள்ராஜ், பஞ்சநாதன், தென்னிந்திய கரும்பு விவசாயிகள் சங்க துணைத்தலைவர் அமரேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

திருவலம் அருகே அமைந்துள்ள வேலூர் கூட்டுறவு சர்க்கரை
ஆலையின் நடப்பு ஆண்டு அரவையை கலெக்டர் ராமன் துவக்கி வைக்கி வைத்தார் , அருகில் மேலாண்மை இயக்குனர் தீபக் ஜேக்கப், நிர்வாகக் குழு தலைவர் குமார், துணைத்தலைவர் ரங்கநாதன்.

Advertisement
SHARE
Rj suresh
வேலூர்