வேலூரில் புகழேந்தி…. பரபரப்பு பேட்டி

ன்னீர் செல்வம்,எடப்பாடி பழனிசாமி,பி.எஸ். பாண்டியனையும்,மனோஜ்பாண்டியனையும்

0
131
Advertisement

ஆறுமுகசாமி ஆணையம்

Advertisement

ஆறுமுகசாமி ஆணையம் எங்களை மட்டும் குறிவைக்க கூடாது. விசாரணைக்கு பன்னீர்செல்வத்தையும் எடப்பாடிபழனிசாமியையும் ,பி.எஸ். பாண்டியனையும்,மனோஜ்பாண்டியனையும் விசாரணைக்கு அழைக்க வேண்டும் – டிடிவி தினகரன் முதல்வராக வரவேண்டும் என்பதுதான் எல்லோருடைய ஆசை – 6 அமைச்சர்களை தவிர மீது அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் அமைச்சர்களும் ஆதரிப்பார்கள் வேலூரில் டிடிவி ஆதரவாளர் புகழேந்தி பேட்டி

 வேலூர்மாவட்டம்,வேலூரில் புதியபேருந்து நிலையம் அருகில் டிடிவி தினகரனின் ஆதரவாளர் புகழேந்தி செய்தியாளர்களிடம் கூறியதாவது. சசிகலா 31 ஆம் தேதி வரை மௌனவிரதம் என்பதால் நாளையும் நாளை மறுதினம் தான் பெங்களூரில் நேரில் சென்று விவரங்களை தெரிந்துகொண்டுதான் அவர் விசாரணை ஆணையத்தில் விசாரனைக்கு செல்வாரா என்று கூறுவோம்.

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையம் சாவில் மர்மம் இருக்கிறது என்றால் பன்னீர் செல்வத்தையும் முதல்வர் எடப்பாடி பழனிசாமியையும் விசாரணைக்கு ஏன் அழைக்கவில்லை. ஆட்சியாளர்கள் விசாரணை கமிஷன் அமைத்தால் சரியாக இருக்காது நியாயமாக அமையாது என்று கூறுகிறோம்.

விசாரணை ஆணையம் சம்மன் கொடுத்து பன்னீர் செல்வம்,எடப்பாடி பழனிசாமி,பி.எஸ். பாண்டியனையும்,மனோஜ்பாண்டியனையும் எல்லோரையும் விசாரணைக்கு அழைத்து விசாரணை நடத்த வேண்டும். ஆனால் ஆணையம் எங்களை மட்டுமே குறி வைக்கிறார்கள்.

  18 சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதிநீக்கம் குறித்து நடைபெறும் வழக்கும் சொந்த கட்சிக்கும் ஆட்சிக்கும் துரோகம் செய்த 11 சட்டமன்ற உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்ய கோரும் வழக்கும் நடைபெற்று வருகிறது. இதில் நல்ல தீர்ப்பு அமையும் என்று எதிர்பார்க்கிறோம்.

   18 சட்டமன்ற உறுப்பினர்களில் ஒருவரை முதல்வராக்குவோம் என டிடிவி தினகரன் கூறியுள்ளார். டிடிவி தினகரன் முதல்வராக வரவேண்டுமென்று தான் எல்லா தரப்பினரும் எதிர்பார்க்கின்றனர்.

ஆட்சிமாற்றம் விரைவில் ஏற்படும் 6 அமைச்சர்களை தவிர எல்லா சட்டமன்ற உறுப்பினர்களும் எல்லா அமைச்சர்களும் டிடிவி தினகரனுடன் வருவார்கள் என்று கூறினார்.

பேட்டியின் போது முன்னாள் மாமன்ற உறுப்பினர் துரை அரசன் உடனிருந்தனர்.

SHARE
Rj suresh
வேலூர்