வீரப்பன்- செய்தியாளனின் அவதி வரலாறு

எமது "தமிழ்செய்தி" வாசக நெஞ்சமங்களுடன்

Advertisement

ஒரு செய்தியாளனின் வரலாறு…..! என்பதை வீட அவனின் சகாப்தம்…….! என்றால் மிகையாகாது.

அதுதான் தம்பி சிவசுப்பிரமணியனின் பத்திரிகை உலக அனுபவம்.

அவர் தனிப்பட்ட முறையில் வீரப்பனை முதல் முதலில் சந்தித்து விட்டு வந்த போது, அவரை ஊறுகாயாக நினைத்த பத்திரிகை நண்பர்களையும் நான் நன்கு அறிந்தவன்.

நெற்றி கண் குற்றவாளிகளிகளையும் புரட்டியெடுத்த நக்கீரனின்…! வளர்ச்சியில் முக்கியத்துவம் வாய்ந்த நபர்களில் ஒருவர் நமது சிவசுப்பிரமணியன் என்பதை பத்திரிகை வரலாற்றில் பதிவு செய்யப்பட்ட வேண்டும்.

அயோக்கியத்தனமான அரசு மற்றும் அரசியல்வாதிகளின் திருமுகங்களை படம்பிடித்து காட்டிய நக்கீரன் பட்ட கஷ்டம் தமிழ் அறிந்தவர்கள் நன்கு அறிவார்கள்.

 நல்ல தமிழ் வழிபறியாகி விடக்கூடது என்று நித்தம் நினைக்கும் சிவசுப்பிரமணியனை இன்று வரை இதயக்கனியாக காத்து வரும் நக்கீரன் கோபால்….!  பத்திரிகை உலகின் ஆசிரியர்களுக்கான ஒரு முன்னுதாரணமாகும்.

உண்மையான தகவல்களை உலகத்தில் உள்ள சூடு சுரணை…. உணர்வு உள்ளவர்களுக்கு உரக்க செல்வதே பத்திரிகைகளில் கடமையாகும்…..!.
இதுவே அரசியின் சாசனமாகும்…!

மன்னர்களின் ஆட்சி மாறியது….!
சர்வாதிகாரிகளின் ஆட்சி மாறியது…..!

என்றாலும் நமக்கு நாமே சூனியம் வைத்ததுக்கொண்ட சுதந்திர நாட்டில்…! ஜனநாயக ஆட்சியில் ஓட்டுபோட்டு ஏற்றிவைத்த ஏமாளி மக்களை எட்டி உதைத்த…. இன்றும் உதைத்து கொண்டிருக்கும், ஆங்கிலேயர்களால் ஆசிர்வதிக்கபட்ட அவதிகளின் ஆட்சிக் கடலில் எதிர்நீச்சல் போடும் நக்கீரன்…..! சிவசுப்பிரமணியன் பட்ட துயரங்களை…. பட்டியலிட்டு….! படிப்பவர்களின் இதயம் துவண்டு விடும் வடிவத்தில் புத்தகமாக வெளியீடு…. செய்து.

அதற்கு சேலத்தில் விழா எடுத்தது….!

” நாம் எதற்கும் அச்சோம்” என்ற வார்த்தைக்கு பொருள் தந்த நக்கீரன் போர்ப்படை தளபதிகளுக்கு எமது “தமிழ்செய்தி” வாசக நெஞ்சமங்களுடன் நமது வாழ்த்துக்களை பதிவு செய்கிறோம்…..!

Advertisement
SHARE
சங்கர மூர்த்தி
தினகரன்,மாலைமுரசு பத்திரிகைகளில் 28 ஆண்டுகள் பணிபுரிந்த மூத்த பத்திரிகையாளர்.செய்திக்கு ...7373141119