வாணியம்பாடி பெண் தற்கொலையில் சந்தேகம்

வடபுதுபட்டி கிராமத்தை சேர்ந்தவர்  ராஜேஷ்

0
66
Advertisement

வாணியம்பாடி அருகே பெண் தூக்கில் தற்கொலை…!

சாவில் சந்தேகம் இருப்பதாக பெண்ணின் உறவினர்கள் காவல் நிலையத்தில் புகார்.

வேலூர் மாவட்டம்

வாணியம்பாடி அடுத்த வடபுதுபட்டி கிராமத்தை சேர்ந்தவர்  ராஜேஷ் இவரும் சன்றிற்குப்பம் பகுதியை பெருமாள் என்பவரின் மகள் சூரிய கலா(27) இவருக்கும் ராஜேஷ்(32) கும் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன் திருமணம் ஆகி 2 குழந்தைகள் உள்ளன.

சூரிய கலா ஆம்பூர் பகுதியில் உள்ள தனியார் ஷூ தயாரிக்கும் தொழிற்சாலையில் பணி புரிந்து வந்தார்.

இந்த நிலையில் திடீர் என நேற்று நள்ளிரவு சூரிய கலா தனது கணவர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக அம்பலூர் பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து  காலை  சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் சடலத்தை மீட்டு  பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து இறந்த  பெண்ணின்  உறவினர்கள் மற்றும் தொழிற்சாலையில் உடன் பணி புரிவோர் என 200கும் மேற்பட்டோர்  மருத்துவமனையில் திரண்டனர்.

சூரிய கலாவின்  உடலில் காயங்கள் இருப்பதாக கூறி சூரிய கலாவின் கணவர் மற்றும் அவரது பெற்றோர் மீதும்  காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து கைது  செய்யவேண்டும் என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து  காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி ராஜேஷ் ஐ  கைது செய்வதாக உறுதி அளித்தனர்.

இதனால் மருத்துவமனை பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Advertisement
SHARE
Rj suresh
வேலூர்