பெட்ரோகெமிக்கல்ஸ் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு..!

29
514
பெட்ரோகெமிக்கல்ஸ் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு..!
Advertisement

பெட்ரோகெமிக்கல்ஸ் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு..!

Advertisement

மங்களூரு ரிபைனரி அண்டு பெட்ரோகெமிக்கல்ஸ் லிமிடெட் நிறுவனம் சுருக்கமாக எம்.ஆர்.பி.எல்., என அறியப்படுகிறது.

இயற்கை வளமான பெட்ரோலியம் தொடர்புடைய பொருட்களை பிரித்தெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ள,

இந்நிறுவனத்தில் காலியாக உள்ள 189 இடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

காலியிட விபரம் : கிராஜூவேட் அப்ரென்டிஸ் டிரெய்னிங் பிரிவிலான கெமிக்கல் இன்ஜினியரிங்கில் 28ம், சிவில் இன்ஜினியரிங்கில் 7ம்,

எலக்ட்ரிக்கல் அண்டு எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங்கில் 8ம், எலக்ட்ரானிக்ஸ் அண்டு கம்யூனிகேஷன் இன்ஜினியரிங்கில் 10ம்,

இன்ஸ்ட்ரூமென்டேஷன் இன்ஜினியரிங்கில் 9ம், மெக்கானிக்கல் இன்ஜினியரிங்கில் 23ம் காலியிடங்கள் உள்ளன.

டெக்னீசியன் அப்ரென்டிஸ்ஷிப் டிரெய்னிங் பிரிவிலான கெமிக்கலில் 26ம், சிவிலில் 7ம், எலக்ட்ரிக்கல் அண்டு எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் 10ம்,

இன்ஸ்ட்ரூமென்டேஷனில் 6ம், மெக்கானிக்கல் இன்ஜினியரிங்கில் 25ம் காலியாக உள்ளன.

கமர்ஷியல் பிராக்டிஸ் பிரிவில் 15 இடங்களும் இத்துடன் காலியாக உள்ளது.

கல்வி தகுதி : கிராஜூவேட் அப்ரென்டிஸ் டிரெய்னிங் பதவிக்கு தொடர்புடைய பிரிவில் பி.இ., அல்லது பி.டெக்., முடித்திருக்க வேண்டும்.

டெக்னீசியன் அப்ரென்டிஸ்ஷிப் டிரெய்னிங் பதவிக்கு தொடர்புடைய பிரிவில் மூன்று வருட இன்ஜினியரிங் டிப்ளமோ படிப்பை முடித்திருக்க வேண்டும்.

கமர்ஷியல் பிராக்டிஸ் பதவிக்கு டிப்ளமோ படிப்பை முடித்திருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க  கடைசி நாள் : 2017 அக்., 7.

விபரங்களுக்கு: http://eapplicationonline.com/MRPLApprentice2017/Pages/Index.aspx என்ற இணைய தள முகவரியில் தெரிந்துகொள்ளலாம்.

தகவல்கள்: ரோகிணி

SHARE