உத்தாமணி-நல்ல மருந்து…..நம்ம நாட்டு மருந்து…

மூலிகைக்கு வேலிப்பருத்தி எனும் பெயர் உண்டு

Advertisement

உத்தாமணி…

Advertisement

மூலிகைக்கு வேலிப்பருத்தி எனும் பெயர் உண்டு. இது குடைச்சல், குத்தல், வீக்கம், நடுக்கம், வலி, இரைப்பு, இருமல், கோழை ஆகியவற்றை நீக்கும்; குடல் புழுக்களைக் கொல்லும்; வாந்தி உண்டாக்கும்; பசியைத் தூண்டும். உத்தாமணி  இலைச்சாறு மூக்கடைப்பை நீக்கும்.

கருப்பைக்கான சத்து மருந்தாகவும் கபத்தையும் வாந்தியையும் வெளியே கொண்டு வர் சிறந்த மருந்தாகும்.

மகப்பேற்றின்போது ஏற்படும் அதிகமான இரத்தப்போக்கினைக் கட்டுப்படுத்துகிறது உத்தாமணி.

இந்த மூலிகை தாவரத்தைக் கிள்ளினால் பால் வடியும்.

குழந்தைகளுக்கு ஏற்படும் மாந்தம், செரியாமை தீர பசுமையான 3 உத்தாமணி இலைகளைச் சேகரித்து, நீரில் கழுவி சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.

இதனை, இலேசாக நசுக்கி 100மிலி தண்ணீரில் இட்டு காய்ச்சி 25 மிலி அளவாக குடிநீராக செய்து கொள்ள வேண்டும். சிறிதளவு வசம்பைச் சுட்டு கரியாகிக் கொண்டு, 2 அரிசி எடை அளவு கரியை 25 மிலி உத்தாமணிக் குடிநீருடன் சேர்த்து நன்றாக கலக்க வேண்டும்.

இதனை குழந்தைகளுக்கு 5 மிலி அளவு காலை, மாலை இரண்டு வேளைகள் கொடுக்கலாம்.

குழந்தைகளுக்கு வயிற்றுப் புழுக்கள் வெளியாக உத்தாமணி இலையின் குடிநீரை, 20 மி.லி. அளவு உள்ளுக்குக் கொடுக்கலாம்.

வீக்கம் குறைய உத்தாமணி இலைச் சாற்றைச் சிறிதளவு சுண்ணாம்புடன் கலந்து கால் வீக்கங்களுக்குப் பற்றாக போடலாம்.

மூட்டுவலி கட்டுப்பட உத்தாமணி இலைச்சாற்றுடன் சம அளவு எலுமிச்சம்பழச்சாறு கலந்து மேல்பூச்சாக வலி உள்ள இடத்தில் தடவ வேண்டும்.

சூதகவாயு, கீல்வாதம், வீக்கம், ஆஸ்துமா, தலைவலி போன்றவற்றிற்கென தயார் செய்யப்படும் மருந்துகளில் உத்தாமணியும் முக்கிய இடம் வகிக்கின்றது.

SHARE
சங்கர மூர்த்தி
தினகரன்,மாலைமுரசு பத்திரிகைகளில் 28 ஆண்டுகள் பணிபுரிந்த மூத்த பத்திரிகையாளர்.செய்திக்கு ...7373141119