யு.எஸ்., ஓபன் டென்னிஸ் ரபெல் நடால் சாம்பியன்..!  

0
124
யு.எஸ்., ஓபன் டென்னிஸ் ரபெல் நடால் சாம்பியன்..!  
Advertisement

யு.எஸ்., ஓபன் டென்னிஸ் ரபெல் நடால் சாம்பியன்..!  

Advertisement

யு.எஸ்., ஓபன் டென்னிஸ் ஒற்றையர் பிரிவில் ஸ்பெயின் வீரர் ரபெல் நடால், சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். யு.எஸ்., ஓபன் டென்னிஸ் ரபெல் நடால் சாம்பியன்..!  

பைனலில், தென் ஆப்ரிக்காவின் கெவின் ஆண்டர்சனை தோற்கடித்தார்.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில், யு.எஸ்., ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் நடந்தது.

இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில், உலகின் ‘நம்பர்–1’ ஸ்பெயினின் ரபெல் நடால், 32வது இடத்தில் உள்ள தென் ஆப்ரிக்காவின் கெவின் ஆண்டர்சன் மோதினர்.

அபாரமாக ஆடிய நடால் 6–3, 6–3, 6–4 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று, மூன்றாவது முறையாக கோப்பை வென்றார்.

இது, இவரது 16வது கிராண்ட்ஸ்லாம் பட்டம். இதுவரை இவர், ஆஸ்திரேலிய ஓபனில் 1 (2009), தனக்கு பிடித்த களிமண் களமான,

பிரெஞ்ச் ஓபனில் 10 (2005–08, 2010–14, 2017), விம்பிள்டனில் 2 (2008, 2010), யு.எஸ்., ஓபனில் 3 (2010, 2013, 2017) என மொத்தம் 16 கிராண்ட்ஸ்லாம பட்டங்களை கைப்பற்றி உள்ளார்.

SHARE