செயின் பறிப்பில் ஈடுபட்ட வாலிபர்கள் 2 பேர் கைது-ராணிப்பேட்டை

சிப்காட், வாலாஜா

0
114
Advertisement

இன்ஸ்பெக்டர் சரவணன்

ராணிப்பேட்டை பகுதியில் செயின் பறிப்பில் ஈடுபட்ட  வாலிபர்கள் 2 பேர் கைது

போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன், சப்-இன்ஸ் பெக்டர் கணேசன் மற்றும் போலீசார் காரை கூட்ரோடு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த 2 வாலிபர்களை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை நடத்தினர்.

சென்னை போரூர் காந்திநகர் நகர் செட்டியார் அகரத்தை சேர்ந்தவர் வாசு தேவன் மகன் இளங்கோ (வயது 24)

சென்னை திருவெற்றியூர் கல்யாண செட்டி நகரை சேர்ந்த ராஜி மகன் சூரியா (22) ஆகியோர் என்பதும்,

ராணிப்பேட்டை மற்றும் சிப்காட், வாலாஜா, ஆற்காடு, காவேரிப்பாக்கம் ஆகிய பகுதிகளில் பைபாஸ் சாலையோரம் செல்லும் பெண்களை குறி வைத்து செயின் பறிப்பில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து, இளங்கோ மற்றும் சூரியாவை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து பைக், தங்க செயின்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Advertisement
SHARE
Rj suresh
வேலூர்