கத்திமுனையில் டூபாக்கூர் நிருபர்….போதையில் கொக்கரிப்பு….

நீதிமான் அருண்குமாரும், நரி என்ற மணிகண்டனும்

Advertisement

இம்சை நிருபர்

Advertisement

பேனா முனையில் பிளாக்மெய்ல்ஸ் செய்து வந்த இம்சை நிருபர்களிடம் கற்றுக்கொண்ட இளம் டூபாக்கூர் நிருபர்கள், தங்களின் வசூல் தொழில் வேட்டையை வேறு ஒரு தளத்துக்கு நகர்த்திக் கொண்டனர்….!.

ஏற்கனவே பத்திரிகை என்றாலே த்துத்…..தெ….ரி…க்…க....!  என்று லேப்ட் சைடில் காரித்துப்பியவர்கள், இப்போது நேருக்குநேர் மூஞ்சியில் துப்புகிறார்கள்….!

சரி சம்பவத்தை படியுங்கள் நீங்கள் எப்படித் துப்பலாம் என்று பின்னர் முடிவு செய்யுங்கள்..

 கோவை

திருப்பூரை அடுத்த மங்கலம் இடுவாயை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 35). இவர் பல்லடம் அருள்புரத்தில் உள்ள பனியன் நிறுவனம் ஒன்றில் ஒப்பந்ததாரராக இருந்து வருகிறார்.

மணிகண்டனிடம் ஏற்கனவே வேலை பார்த்த இடுவாய் ராஜகணபதி நகரை சேர்ந்த அருண்குமார் உள்பட 2 பேர், மணிகண்டனின் காரை நிறுத்துமாறு சைகை காட்டினார்கள். மணிகண்டனுக்கு, அருண்குமாரை ஏற்கனவே தெரியும் என்பதால் காரை நிறுத்தினார். அதில் மூவரும் ஏறிக்கொண்டனர்.

கார் சிறிது தூரம் சென்றதும், முன் இருக்கையில் இருந்த அருண்குமாரும், பின் இருக்கையில் அமர்ந்து இருந்த வாலிபரும் திடீரென்று தாங்கள் மறைத்து வைத்து இருந்த கத்தியை எடுத்து மணிகண்டன் கழுத்தில் வைத்து ‘‘ ரூ.5 லட்சம் கொடுத்தால் விட்டு விடுவோம், இல்லை என்றால் கொலை செய்து விடுவோம்’’ என்று மிரட்டி உள்ளனர்.

இதனால் பயந்துபோன மணிகண்டன் செய்வது அறியாமல் திகைத்தார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் ஒருவர் வந்துள்ளார்.

உடனே மணிகண்டன் கார் கண்ணாடியை திறந்து ‘‘ காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள்’’ என்று கூச்சல் போட்டார். இதனால் மோட்டார் சைக்கிளில் வந்தவர் அதிர்ச்சியடைந்து, அந்த காரை விரட்டி சென்று காரை நிறுத்துமாறு கூறினார்.

  இதையடுத்து காரை மணிகண்டன் நிறுத்தியதும், கார் சாவியை மோட்டார் சைக்கிளில் வந்தவர் எடுத்துக்கொண்டார். அப்போது மணிகண்டன் கழுத்தில் காயம் இருந்தது.

தனிப்படை

இதனால் மாட்டிக்கொண்டோம் பயந்துபோன அருண்குமார் காரை விட்டு இறங்கி முன்னால் சென்று கொண்டிருந்த காரிலும், பின் இருக்கையில் இருந்த வாலிபர் பின்னால் வந்த ஒரு காரிலும் ஏறி தப்பி சென்று விட்டனர்.

இந்த மாவீரர்களை பிடிக்க போலீசார் தனிப்படை அமைத்து இடுவாயை சேர்ந்த அருண்குமார் (28), கருவம்பாளையத்தை சேர்ந்த நரி என்கிற மணிகண்டன் (24), சுல்தான்பேட்டை அறிவொளிநகரை சேர்ந்த வீரபிரவீன்குமார் (20), திருப்பூர் பகவதிநகர் செல்லம்நகரை சேர்ந்த நித்யானந்தன் (29) மற்றும் இடுவாய் மாருதிநகரை சேர்ந்த வினோத்குமார் (29) என்று, 5 பேரை கைது செய்தனர்.

மேலும் நம்பர்1 அருண்குமார் ஏற்கனவே மணிகண்டனிடம் வேலை பார்த்தவர், தற்போது நீதிமான் என்ற பத்திரிகையாளர் என்று விசாரணையில் தெரியவந்தது.

மணிகண்டனை கடத்தி சென்று மிரட்டினால் பணம் கொடுத்துவிடுவார் என்றும் திட்டம் போட்டு, ஒரு வாரமாக பனியன் நிறுவன ஒப்பந்ததாரர் மணிகண்டன் காரில் எங்கெங்கு செல்கிறார் என்றுகண்காணித்து சம்பவத்தன்று, சினிமா பாணியில் காரில் சென்ற மணிகண்டனை பின்தொடர்ந்து ஒரு காரிலும், அவருடைய காருக்கு முன்னால் ஒரு காரிலும் சென்று உள்ளனர்.

 நீதிமான் அருண்குமாரும், நரி என்ற மணிகண்டனும் மோட்டார் சைக்கிளில் சென்று ஒப்பந்ததாரர் மணிகண்டன் காரை வழிமறித்து லிப்ட் கேட்பது போல் நடித்து, கத்தி முனையில் பணம் கேட்டு மிரட்டியது தெரியவந்தது.

அப்போது எதிரே ஒரு மோட்டார் சைக்கிள் வந்ததால் இவர்களுடைய திட்டம் தவிடுபொடியாகி போலீசில் சிக்கிக்கொண்டது விசாரணையில் தெரியவந்தது.

பனியன் நிறுவன ஒப்பந்ததாரரை சினிமா பாணியில் கத்திமுனையில் பணம் பறிக்க முயன்ற சம்பவம் பத்திரிகையாளர்களிடம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த கண்றாவி சுடு தனிவதற்குள், மது அருந்தி ரோட்டில் தகராறு செய்ததாக, போலி நிருபரை போலீசார் கைது செய்தனர் என்ற செய்திஅனல் படுத்தியது….! ஆம் கோவை அவிநாசி ரோடு, ஹிந்துஸ்தான் கல்லுாரி ரோட்டில் ஒருவர், காரில் நின்று மது அருந்தியுள்ளார்.

இதை கண்ட அப்பகுதி பொதுமக்கள் பீளமேடு போலீசாருக்கு போட்டுக்கொடுத்தனர்…..!. விளைவு போலீசார் விரைந்து சென்று விசாரித்தனர். ரோட்டில் காரில் நின்று மது அருந்திய நபர்,ஒரு சாரி சொல்லிவிட்டு சலாம் அடித்திருந்தால்…. பிராபளம் ஓவர்…..!, மப்பு மண்டையை மக்கர் செய்து விட்டது….!

வாக்குலே சாத்தன் டிஸ்கோ ஆட “ஏய் போலீஸ்கார்…! போலீஸ்கார்…..! நான் நி….ர்…ப….ர்ர்ர்ர்…! இப்படித்தான் ரோட்டில் நின்னு தண்ணீ அடி..ப்..பேன்…. என்று வாக்குவாதம் செய்து கொக்கரித்து, போலீஸ்சுக்கு டென்ஷன் ஏற்றினாராம், பத்தக்குறைக்கு பப்ளிக்கிடம்(பொதுமக்களிடமும்) தகராறு செய்தாராம்.

அவரை போலீஸ் ஸ்டேஷனுக்கு அள்ளிக்கொண்டு சென்ற போலீஸ் வழக்கம் போல் அன்பாக,கனிவாக செய்த விசாரணையில், அந்த மூப்பு மைந்தன், கோவை சவுரிபாளையம், என்.ஜி.ஆர்., வீதியை சேர்ந்த அஸ்வின் என்பதும், அவரிடம் இருந்தது போலி நிருபர் அடையாள அட்டை என்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.

மிரட்டல், பொது இடத்தில் மது அருந்துதல் ஆகிய பிரிவுகளின் கீழ், வழக்கு பதிவு செய்து ஜனநாயக தூண்களின் மானத்தை கப்பலேற்றியது கோவை மாநகர் காவல்துறை.

SHARE
சங்கர மூர்த்தி
தினகரன்,மாலைமுரசு பத்திரிகைகளில் 28 ஆண்டுகள் பணிபுரிந்த மூத்த பத்திரிகையாளர்.செய்திக்கு ...7373141119