தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் தனியார் விடுதியில்…! கூவத்தூர் பார்ட் 2..?

36
460
தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் தனியார் விடுதியில்…! கூவத்தூர் பார்ட் 2..?
Advertisement

தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் தனியார் விடுதியில்…! கூவத்தூர் பார்ட் 2..?

Advertisement

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அ.தி.மு.க-வில் அதிகாரப் போட்டி ஏற்பட்டது. சசிகலா, பொதுச் செயலாளரானார்.

அடுத்து, முதல்வராக முற்சித்தார். அதற்குள் சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார்.

இதனால், முதல்வராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். சசிகலா மீது பகிரங்கக் குற்றச்சாட்டைத் தெரிவித்தார் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்.

அவரது தலைமையில் எம்.எல்.ஏ-க்கள், எம்.பி-க்கள், கட்சியின் மூத்த நிர்வாகிகள் அணி வகுத்தனர்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆட்சியை அமைக்க அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் எம்.எல்.ஏ-க்கள் கூட்டம் நடந்தது.

கூட்டம் முடிந்ததும் எம்.எல்.ஏ-க்களை சசிகலா குடும்பத்தினர் கூவத்தூர் ரிசார்ட்டில் தங்கவைத்தனர்.

அதன்பிறகு, முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆட்சி அமைந்தது. அப்போது, சசிகலா குடும்பத்தினருக்கு ஓ.பன்னீர்செல்வம் அணியிலிருந்து கடும் நெருக்கடி கொடுக்கப்பட்டது.

இதையடுத்து, சசிகலா அணியிலிருந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும் டி.டி.வி.தினகரனுக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டது. தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் தனியார் விடுதியில்…! கூவத்தூர் பார்ட் 2..?

இதனால், சசிகலா அணியிலிருந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தனி அணியாக உருவெடுத்தார்.

நீண்ட போராட்டத்துக்குப் பிறகு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அணியும் ஓ.பன்னீர்செல்வம் அணியும் இணைந்தன.

தற்போது, இவர்களுக்கு எதிராக சசிகலா அணி செயல்படத் தொடங்கியுள்ளது.

ஆளுநரைச் சந்தித்த தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் தங்களது ஆதரவை வாபஸ் பெறுவதாகவும் முதல்வரை மாற்ற வேண்டும் என்றும் தனித்தனியாக கடிதம் கொடுத்தனர்.

அதன்பிறகு, ஆலோசனை நடத்திய தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-கள் சென்னைக் கிழக்குக் கடற்கரைச் சாலையை நோக்கிப் பயணிப்பதாகத் தகவல் வெளியானது.

தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 19 பேர் கிழக்குக் கடற்கரை சாலையில் உள்ள ரிசார்ட்டில் தங்கவைக்கப்படலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

அங்கிருந்து அடுத்தகட்ட ஆலோசனை நடத்தப்பட உள்ளதாக தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் சிலர் தெரிவித்தனர்.

தினகரனின் ஆதரவு எம்.எல்.ஏ-க்களிடம் குதிரை பேரம் பேசி முதல்வர் எடப்பாடி பழனிசாமி தரப்பினர்,

தங்கள் பக்கம் இழுக்க வாய்ப்புள்ளதால், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

இது இன்னொரு கூவத்தூர் முயற்சியாக வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

SHARE