போக்குவரத்துக்கழக ஊழியர்கள் போராட்டம்….சிட்டிசன் வாய்ஸ் ஜெயராமன் பேட்டி..

போக்குவரத்துக்கழக  ஊழியர்கள் போராட்டம் நியாயமானதுதான்......

Advertisement

போக்குவரத்துக்கழக  ஊழியர்கள் போராட்டம் நியாயமானதுதான்……

Advertisement

ஆனால் இதில் பொதுமக்களின் ஆதரவு கொஞ்சம்கூட இல்லாதது மிகவும் கவலைப்பட வேண்டியதில் ஒன்றாகும்.

போக்குவரத்துக்கழக ஊழியர்கள் மீது பொதுமக்களுக்கு இருக்கும் வெறுப்புக்கா காரணம் ஆயிரம்.

அரசுபஸ்களில் உள்ள குறைபாடு…  இதன்காரணமாக பொதுமக்கள் படும் அவதிக்களுக்காக என்றாவது ஒருநாள் போக்குவரத்துக்கழக ஊழியர்கள் பயணிகள்கள நலனுக்காக போராட்டம் நடத்தி இருந்தால்..!

இன்று பள்ளி கல்லூரி மாணவர்கள் இந்த போராட்டத்தில் கலந்துகொண்டு ஆதரவு தந்து இருப்பார்கள்.

MLA,MPக்கு கோரிக்கை வைக்காமலே இரு மடங்கு ஊதியம்.

சில துறை அதிகாரிகளுக்கு மத்திய மாநில அரசுக்கு இணையாண ஊதியம்.

ஊதியத்தை விட இலஞ்சத்திலேயே குடும்பம்ஓட்டும்       ஒரு சில துறையில் உள்ள ஊழியர்களுக்கும் மத்திய மாநில அரசுக்கு இணையாண சம்பளம்.

ஆனால் இரவு பகல் பாராமல் அலுவலகம் சென்று வாட்ஸ்அப் நோண்டாமல்……  மேஜையை தேய்க்காமல்  பொறுப்புடன் பணி செய்யும் போக்குவரத்து தொழிலாளர்களுக்கு மட்டும் கொடுப்பதற்கு நிதி இல்லை என கூறும் அவலம் தமிழக அரசுக்கு தலைகுனிவை ஏற்ப்படுத்தியுள்ளது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக போக்குவரத்துஊதிய உயர்வு ஓப்பந்தம் தீர்க்கப்படாமலுள்ளதகடந்த காலத்தில்சென்னை வெள்ளத்தில் தமிழக அரசை
முடங்கி போனது.

ஆனால் அரசு போக்குவரத்து துறை சேர்ந்த தொழிலாளர்கள் திறன்பட செயல்ப்பட்டு பொதுமக்களை பாதுகாத்தனார். இது போன்று சில விபரங்களை கூறிஆதரவு தாரீர் இந்த வேலை நிறுத்ததிற்கு என்று போக்குவரத்துக்கழக  ஊழியர்கள் தங்களது போராட்டத்தை  முன்வைத்துள்ளார்.

இவர்களின் போராட்டம் கூறித்து, சிட்டிசன் வாய்ஸ் கிளப் தலைவர் கோவை ஜெயராமன் தனது வாட்ஸ்அப் வழியாக நமது “தமிழ் செய்தி” வாசகர்களுக்கு தெரிவித்த கருத்து

SHARE
சங்கர மூர்த்தி
தினகரன்,மாலைமுரசு பத்திரிகைகளில் 28 ஆண்டுகள் பணிபுரிந்த மூத்த பத்திரிகையாளர்.செய்திக்கு ...7373141119