தென்காசி பாராளுமன்றத் தொகுதி யாருக்கு?

ராஜபாளையத்தில் திமுக

0
171
Advertisement

தொகுதி யாருக்கு?

இந்த தொகுதியில் சங்கரன்கோவில்,வாசுதேவநல்லூர், தென்காசி, கடையநல்லூர், ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர் என ஆறு சட்டமன்ற தொகுதிகள் உள்ளது.
ஒட்டுமொத்தமாக இந்த பாராளுமன்றத் தொகுதியில் தேவர் மற்றும் தலீத் சமூகம் பெருவாரியாக உள்ளன.
கடையநல்லூர் மற்றும் தென்காசி தொகுதிகளில் கணிசமாக இஸ்லாமியர்கள் வாக்கு உள்ளது.
இந்த தொகுதியில் புதியதமிழகம் கணிசமாக தலீத் வாக்குவங்கியை தன்வசம் வைத்துள்ளது
துணை முதல்வர் பன்னீரின் பூர்வீகமான சிவகிரி இந்த பாராளுமன்றத் தொகுதியில் வருகிறது.
கடந்த தேர்தல்களில் கட்சிகள் வாங்கிய வாக்குகள்,தற்போதைய நிலை, புதிய வாக்களர்களின் எண்ணம் என பலவற்றை ஆராய்ந்தோம்.
தேர்தலில் சாதி ரீதியான பக்களிப்பு அதிகமாக உள்ள தொகுதி இது.
அதிமுக வின் தற்போதைய நிலை பரிதாபமே.
சங்கரன்கோவில்,வாசுதேவதல்லூர்,ஸ்ரீவில்லிபுத்தூர் என மூன்று தொகுதிகளில் தினகரனின் அமமுக முன்னிலையில் உள்ளது.
ராஜபாளையத்தில் திமுக விற்கே வாக்குகள் அதிகம்.
தென்காசி,கடையநல்லூர் தொகுதிகளில் அமமுக,திமுக விற்கிடையே கடும்போட்டி. இஸ்லாமியர்கள் வாக்கின் பெரும்பகுதி யாருக்கு கிடைக்கிறதோ அந்த கட்சியே இந்த இரண்டு சட்டமன்ற தொகுதிகளில் முந்தும்.
எப்படிப் பார்த்தாலும் இஸ்லாமியர்கள் வாக்கும்,இளைய சமுதாயத்தினர் வாக்கும் யாருக்கு செல்கிறதோ அவர்களுக்கே தென்காசி சிம்மாசனம்.
அமமுக-திமுக இடையேதான் போட்டி. தற்போதைய நிலையில் தினகரன் சற்று முன்னிலை.
புதிய தமிழகம் திமுக உடன் சேர்ந்தால் முடிவு மாறலாம்.
Advertisement
SHARE