நெருஞ்சில்..நல்ல மருந்து நம்ம நாட்டு மருந்து…..

பொடிக்கப்பட்ட நெருஞ்சில் விதைகளுடன் தேனும், ஆட்டின் பாலும் கலந்து குடிக்க சிறுநீரக கற்கள் நீங்கும்.

Advertisement

நெருஞ்சில்….!

Advertisement

ஜில்லென்று பூக்கும் சிறுநெருஞ்சில் வைகளில், பெரு நெருஞ்சில் அல்லது யானை நெருஞ்சில் என்னும் பிரிவகளுண்டு. நெருஞ்சிலுக்கு யானை வணங்கி என்ற பெயர்களும் உண்டு.

நெருஞ்சில்… சிறுநீரகம், கல்லீரல் பாதிப்புகள், சோரியாஸிஸ் எக்சிமா போன்ற சர்ம நோய்களுக்கும், விந்து முந்துதல் (Pre-mature ejaculation), மற்றும் இதயம், ரத்தநாள பாதிப்புகளுக்கும், மருந்தாக பயன்படுத்துகின்றனர்.

மேலும் பாலியல் வேட்கையை அதிகரிக்கவும், குழந்தையில்லா குறைபாட்டை போக்கவும் நெருஞ்சி பயன்படுத்தப்படுகிறது.

சிறுநீர் சுலபமாக பிரியவும், மனநிலை (Mood) மாறவும் உதவும் நெருஞ்சில் ஒரு முள் மூலிகை இதற்கு தமிழில்  திரிகண்டம், கோகண்டம், நெருஞ்சி புதும், காமரசி…. என்ற பெயர்கள் உண்டு.

சிறுநீரகம்

இதன் பொதுவான குணங்கள்: சிறுநீர் பெருக்கி, ஆண்மை பெருக்கி, உடலுக்கு வலிமை தரும் ‘டானிக்’, குளிர்ச்சி உண்டாக்கும்,

1. இதன் முக்கிய பயன் சிறந்த சிறுநீர் பெருக்கி ஆயுர்வேத ஆசான் சரகர் நெருஞ்சிலை சிறந்த ஐந்து சிறுநீர் பெருக்கும் மூலிகைகளில் ஒன்றாக சொல்லுகிறார்.

2. சிறுநீரக பாதையில் ஏற்படும் வலிகளுக்கு பாலில் கொதிக்க வைத்த நெருஞ்சில் கஷாயம் நல்லது.

3. பொடிக்கப்பட்ட நெருஞ்சில் விதைகளுடன் தேனும், ஆட்டின் பாலும் கலந்து குடிக்க சிறுநீரக கற்கள் நீங்கும்.

சிறுநீர் கழிக்கையில் ஏற்படும் எரிச்சலுக்கு, தனியா விதைகளுடன் நெருஞ்சில் சேர்த்து செய்யப்பட்ட கஷாயம் நிவாரணமளிக்கும்.

சிறுநீரக கோளாறுகளுக்கு நெருஞ்சில் நல்ல மருந்து. சிறுநீரகப் பாதைகளை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது. அநூரியா (Anuria) எனும் சிறுநீர் வராமல் போகும் நோய்க்கு, நெருஞ்சில் சேர்ந்த கோக்சூராதி க்ருதம் (மூலிகை சேர்த்த நெய்) நல்ல மருந்து.

நெருஞ்சில் நீரிழிவு நோயை எதிர்க்கும். நீரிழிவு நோயாளிகளுக்கு தரப்படும் மருந்தில் ஒன்று.

ஜனன உறுப்புக்களின் செயல்பாட்டை சீராக்கி, ஆண், பெண் இருவருக்கும் பாலியல் உணர்வை தூண்டுகிறது. சதவாரி, அஸ்வகந்தா, இவற்றுடன் சேர்ந்து, பெண்களின் கர்பப்பை (Uterus) பாதிப்புகளுக்கு மருந்தாகும்.

ஆண்களின் ஆண்மையை பெருக்குகிறது. ஆண்மை குறை தீர, நெருஞ்சிலை தேனுடன் எடுத்துக் கொள்ள வேண்டும். பாலியல் நோய்களான கொனோரியா (Gonorrhoea) போன்றவற்றுக்கும் நெருஞ்சில் அருமருந்து. ஆண் ஹார்மோனான Testosterone உற்பத்திக்கு காரணமான Luteinizing hormone களை ஊக்குவிக்கிறது. இ

தனால் உடல் இளமையாக இருக்க உதவுகிறது. 30 நாட்கள் நெருஞ்சிலை உட்கொண்டு வர, ஆண்மலட்டுத்தன்மை நீங்கும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

நெருஞ்சில் வாதத்தையும், கபத்தையும் குறைக்கும். பசியை தூண்டும் வயிற்றுக்கோளாறுகளை போக்கும்.

மலச்சிக்கல், மூலவியாதிகளுக்கு நெருஞ்சில் பயன்படுகிறது.

நெருஞ்சில் கஷாயத்துடன் சுக்கு சேர்த்து காலையில் பருகினால் ரூமாட்டிஸம், இடுப்பு வலி குறையும்.

நெருஞ்சில் இதயத்திற்கு நல்லது. ரத்தக்குழாய்களை விரிவடையச் செய்து சீராக இரத்த ஒட்டம் இயங்க உதவும்.

 குழந்தை வரம் தரும் நெருஞ்சி இலையில், இரும்புச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ் போன்றவை காணப்படுகின்றன. இது பாலியல் பிரச்சினைகளையும், சிறுநீர் கோளாறுகளையும் நீக்கும் அருமருந்தாக உள்ளது.

பெண்களுக்கு நிவாரணம் நெருஞ்சி வேரை எலுமிச்சம் பழம் சாறு கொண்டு அரைத்து குடித்துவர பூப்படையாத பெண்கள் பூப்பெய்துவர்.

நெருஞ்சி செடியை நிழலில் உலர்த்தி சூரணம் செய்து 2 கிராம் அளவு பாலுடன் கலந்து காலை மாலை இருவேளை குடித்து வர வெட்டை நோய் குணமாகும்.

ஆண்மை பெருக நெருஞ்சி முள்ளை சேகரித்து அதை பசும்பாலில் வேகவைத்து உலர்த்தி பொடியாக்கி வைத்துக்கொள்ளவும்.

இதில் 2 கிராம் அளவு எடுத்து பாலுடன் கலந்து காலை மாலை இருவேளைகள் அருந்தி வர வீரிய விருத்தி உண்டாகும், ஆண்மை பெருகும்.

 சறுநீர் பாதையில் எரிச்சலோ, வலியோ காணப்பட்டால் நெருஞ்சி செடியுடன் நித்யகல்யாணி பூ சம எடை எடுத்து நீர்விட்டு காய்ச்சி வடிகட்டி பாலும் சர்க்கரையும் சேர்த்து காலையில் மட்டும் குடித்துவர அந்த பாதிப்பு குணமாகும்.

சிறுநீரக கல் அடைப்பு நெருஞ்சி இலைகளை நீரிலிட்டு காய்ச்சி வடிகட்டி அதனுடன் கற்கண்டு சேர்த்து குடித்துவர சிறுநீரில் ரத்தம் வெளிப்படுதல் குணமாகும்.

 கண் எரிச்சல் குணமடையும் உடல் சூடு காரணமாக சிலருக்கு கண் எரிச்சல் ஏற்படும்.

அவர்கள் நெருஞ்சி செடி மற்றும் அருகம்புல் ஒரு கைப்பிடி எடுத்து அதை மண் சட்டியிலிட்டு நீர்விட்டு காய்ச்சி வடிகட்டி குடித்துவர கண் எரிச்சல், கண் சிவப்பு, கண்ணில் நீர் வடிதல், உடல் உஷ்ணம் போன்றவை குணமாகும்.

மஞ்சள் காமாலைக்கு நிவாரணம் நெருஞ்சி வேர் கீழாநெல்லி வேர் இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்து இளநீரில் கலந்து குடித்துவர மஞ்சள் காமாலை நோய் தணியும்.

10 கிராம் கருப்பு எள் மற்றும்10 கிராம் நெருஞ்சி முள்ஆகிய இரண்டையும் எடுத்து250 மி.லி தண்ணீரில் கலந்துஊற வைத்து கொள்ளவும்.

தினமும் 2 முறை இந்த நீரைகுடித்து வந்தால்பெண்களுக்கு மாதவிடாய்சரியாக வெளிப்படாததுகுறைந்து இயல்பானமுறையில் இரத்தப்போக்குஏற்படும்.

SHARE
சங்கர மூர்த்தி
தினகரன்,மாலைமுரசு பத்திரிகைகளில் 28 ஆண்டுகள் பணிபுரிந்த மூத்த பத்திரிகையாளர்.செய்திக்கு ...7373141119