ஆப்பு அசைத்து விட்டதா…!?! அண்ணா திமுக….?

காவி அடி, கழகத்தை அழி

பா.ஜ.க வுடன் அதிமுக கூட்டணி..?
Advertisement
Advertisement

போர்க்களமாகிவிட்ட தமிழகத்தில்……!

எந்த சலனமும் இல்லாமல் வந்து சென்று விட்டார் பிரதமர்.

பிரதமர் மோடியை வருக…! வருக என்று வரவேற்பதில் பெருமையடைகிறது தமிழகம் என்று வாழ்த்துப்பாடிய அந்த திருநாளிலேயே அண்ணா திமுகவின் தற்போதைய அதிகாரபூர்வமான நாளேட்டில்….! “நெருப்பாகும்… வெறுப்பு…!” என்ற அக்னி தலைப்பில்

மத்திய அரசின்  வஞ்சகங்களை பட்டியலிட்டு வெளியீடு செய்த கவிதை, தமிழக அரசியல் புள்ளிகளிடையே பரபரப்பை உண்டாக்கியிருப்பதில் மாற்றுக்கருத்தில்லை..!

அண்ணா திமுகவின் நிரந்தர எதிரிகளையும் ஏன் அண்ணா திமுகவின் அடிமட்ட தொண்டர்களின் புருவத்தை பலவாறாக வலைக்க வைத்துள்ளது…!

காவி அடி, கழகத்தை அழி…’ என்ற கவிதையின் எதிரொலியால் சோழவந்தான் சு… சாமி, மன்னார்குடும்பத்தை சுளுக்கு எடுத்ததை கண்டு…!

திடுக்கிட்ட திகார்புகழ் தினகரனே திண்டாடிப்போய், ஜெயலலிதாவின் ஆஸ்த்தான கவிஞன் “சித்தரகுப்தனை” பலிவாங்கி…..! கருப்பு ஆடு…. அது.. இது… என்று கதறியதை கண்டு தமிழகமே வியந்தது, ஒருபெரும் வரலாறு…!

அதே வியப்பு தான் தற்போது…! உருவெடுத்துள்ளது.

அண்ணாதிமுக…. அப்பு…! அசைத்துவிட்டதா..? என்ற அதிர்ச்சியில் அரசியல் ஆர்வலர்கள் குழப்பத்தில் உள்ளனர்..!
காரணம்..?

மோடிக்கு எதிராக நடந்த கறுப்புக் கொடி போராட்டத்தை ஆதரிக்கும் தொனியிலும், மத்திய அரசின் தமிழகம் மீதான தொடர் வஞ்சகங்களைப் பட்டியலிட்டும், ஒட்டுமொத்தத் தமிழர்களின் வெறுப்புப்பார்வையை….!

கவிதையில் வடித்த ” நமது புரட்சி தலைவி அம்மா” மீது, தமிழக பாரதிய ஜனதாவின் கழுகு பார்வை நெருப்பாகி விட்டது என்பதே..

SHARE
சங்கர மூர்த்தி
தினகரன்,மாலைமுரசு பத்திரிகைகளில் 28 ஆண்டுகள் பணிபுரிந்த மூத்த பத்திரிகையாளர்.செய்திக்கு ...7373141119