ஜோதிடக்கலையில்…சூரியன்

கம்பீரமான தோற்றத்திற்கும்

Advertisement

அவரவரின் ஜாதகப்படி சூரியனின் பலம் கிடைக்க என்ன செய்யலாம்?

ஜாதகருடைய கம்பீரமான தோற்றத்திற்கு இவர்தான் காரணம் !!

ஜாதகருடைய கம்பீரமான தோற்றத்திற்கும், உடலில் உள்ள எலும்புகளுக்கும், தலைப்பகுதிக்கும், வலது கண்ணுக்கும் சூரியனே காரகம் பெறுகிறார்.

ஒருவரின் ஜாதகத்தில் சூரியன் 6, 8, 12 ஆகிய இடங்களில் மறைந்திருந்தாலும், நீச்சமாக இருந்தாலும், சூரியன் அந்த ஜாதகருக்கு பலவீனமாக இருக்கிறார் என்று தெரிந்துகொள்ளலாம்.

சூரியன் பலவீனமாக இருக்கும் ஜாதகர்கள், பித்தளை வாளியில் நீர் நிரப்பிக் குளிப்பது நல்லது.

பிளாஸ்டிக் பொருள்களை உபயோகிப்பதைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும். தினமும் சூரிய நமஸ்காரம் செய்வது மிகச் சிறந்தது.

சூரியன் லக்ன பாவத்தில் பலவீனமானால், கோவில்கள், மருத்துவமனைகள் ஆகிய இடங்களில் குடிநீர் வசதி செய்து கொடுப்பது நல்ல பரிகாரமாகும்.

இரண்டாம் பாவம் எனும் தனஸ்தானத்தில் பலவீனமானால், நல்லெண்ணெயையும், தேங்காயையும் ஞாயிற்றுக்கிழமைகளில் கோவிலுக்குக் கொடுக்கலாம்.

மூன்றாம் பாவத்தில் பலவீனமானால், நெற்றியில் சந்தனம் வைப்பது நல்லது. தனிக்குடித்தனம் கூடாது. ஏழைகளுக்கு அன்னதானம் செய்வது மிகவும் நல்லது.

நான்காம் பாவத்தில் பலவீனமானால், பார்வை குறைந்தவர்களுக்கு கண்ணாடி வாங்கிக் கொடுப்பது. கண் அறுவை சிகிச்சை செய்பவர்களுக்கு உதவி செய்வது நல்லது. மேலும், மாமிச உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.

ஐந்தாம் பாவத்தில் பலவீனமானால், வாக்கு தவறக்கூடாது. குரங்குகளுக்கு வாழைப்பழம், வெல்லம் கொடுப்பது நல்லது.

பிரதோஷ காலத்தில் அர்ச்சனை செய்வதும் நல்ல பலனைத் தரும். சர்க்கரைப் பொங்கல் தானம் செய்வதும் மிகச் சிறந்தது.

ஆறாம் பாவத்தில் பலவீனமானால், ஏழு வகையான தானியங்களைப் பறவைகளுக்குத் தருவது நல்லது.

ஏழாம் பாவத்தில் பலவீனமானால் எருமை மாட்டுக்கு ஆகாரம் கொடுப்பதும், சிவப்புச் சந்தனத்தை கோவில் அபிஷேகத்துக்கு வாங்கித் தருவதும், நண்பர்களிடம் விரோதம் பாராட்டாமல் இருப்பதும் நல்ல பலன்களைத் தரும்.

எட்டாம் பாவத்தில் பலவீனமானால், உடன் பிறந்தவர்களைக் கஷ்டப்படவிடாமல் பார்த்துக்கொள்வது நல்லது. வீட்டின் வாசல் தெற்கு வாசலாக இருக்கக்கூடாது.

கோதுமை, வெல்லம், வெண்கலப் பாத்திரங்களை கோவிலிலுக்குத் தானம் செய்வது நல்லது. பிரதோஷ நாளில் அபிஷேகத்துக்கு பன்னீர் வாங்கித் தருவது நல்லது.

ஒன்பதாம் பாவத்தில் பலவீனமானால் தந்தையைக் கவனித்துக்கொள்வது நல்லது. மற்றவர்களிடம் எதையும் இரவல் வாங்கக் கூடாது.

பத்தாம் பாவத்தில் பலவீனமானால் மேற்குப் பக்கம் வாசல் இருக்கக்கூடாது. ஏழைகளுக்கு பொங்கல், தயிர் சாதம் அன்னதானம் செய்வது நல்லது.

பதினோராம் பாவத்தில் பலவீனமானால், குலதெய்வ வழிபாடு நல்லது. கோவில்களில் அபிஷேகத்துக்குப் பால் வாங்கித் தருவதும் நல்லது.

பன்னிரெண்டாம் பாவத்தில் பலவீனமானால், கிழக்கு வாசல் நல்லது. சிவ அஷ்டோத்ர பாராயணம் செய்வதும் பித்ரு காரியங்களை விடாமல் செய்வதும் நல்லது.

Advertisement
SHARE
சங்கர மூர்த்தி
தினகரன்,மாலைமுரசு பத்திரிகைகளில் 28 ஆண்டுகள் பணிபுரிந்த மூத்த பத்திரிகையாளர்.செய்திக்கு ...7373141119