பெண்குலத்தின் சாதனை திருநாள்-சாருமதி சிறப்பு பேட்டி

தன்னம்மிப்பிக்கையுடன் எதிர் காலத்தை

Advertisement

மார்ச் 8-

Advertisement

ஆண் ஆதிக்க சமுதாயத்தில் இருந்து பெண்களுக்கான உரிமைகளை வென்ற நாள் என்று குறிப்பிடுவதை தவிர்த்து, இது பெண்களுக்கான சமத்துவம், உரிமைகளை வலியுறுத்துவதற்காக மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது என்பதே சிறப்பு என்கிறார். GCT Nature’s Products நிறுவனத்தின் நிறுவனர் டாக்டர் சாருமதி.

மேலும் அவர் மகளிர் தின சிறப்பு குறித்து நமது “தமிழ் செய்தி” மின் இதழுக்காக அளித்த சிறப்பு சந்திப்பில் கூறியதாவது.

எதையும் தாழ்வாக கருதாமல் சிறிது சமூக அக்கறையோடு யோசித்தால் சாதாரண பெண்கள் கூட சரித்திரம் படைக்கமுடியும்.

இது வரையில் “பெண்களின்  சரித்திரத்தை படித்து கொண்டிருந்தோம் இனி நாம் சரித்திரத்தை  படைப்போம்” என்று கூறி தனது சமூக அக்கறையையும் வெளிப்படுத்தினார் டாக்டர் சாருமதி.

இவர் சிறந்த தொழில் முனைவோர் மட்டுமல்ல சிறந்த பெண் சாதனையாளர், காரணம் இரசாயன கலப்பு இல்லாத முழுக்க… முழுக்க இயற்கையின் படைப்புகளின் கிடைக் பெறும் மூலிகைகளை கொண்டு ஆரோக்கியமான அழகு சாதன பொருட்களை உற்பத்தி செய்வதில் கடல் கடந்து சாதனை படைத்துள்ளார்.

  சமூக சேவை சரித்திரம் படைக்கும் பெண் சாருமதி, அன்னை இந்திரா காந்தி நூற்றாண்டு விழாவில் பெண் சாதனையாளர் விருது, மற்றும்
எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் சாதனை பெண் விருதுகளை பெற்றார்.
இவர் கடந்து வந்த பாதை இன்று பல பெண்களுக்கு வழிகாட்டியாக இருக்கிறது.

கணக்கிலடங்கா விருதுகளை வாங்கியிருதாளும், இவருடைய இலக்கு  பெண்களுக்கு தன்னம்பிக்கை வழிகாட்டியாகவும்…. சுய தொழில் ஊக்குவிப்பாளராக இருக்க வேண்டும்

மேலும் நம் இந்திய பெண்கள் உலக அளவில் சரித்திர புத்தகத்தில் முதலிடத்தில் இருக்க வேண்டும் என்பதே எனது பேராசை என்கிறார்.

நம் நாடு தொழில் துறையில் முன்னேற வேண்டுமெனில் முதலில் பெண்கள் தொழில் துறையில் முன்னேற வேண்டும் என்று தனது நாட்டு பற்றையும் வெளிப்படுத்தினார்.

பெண் தொழில் முனைவோரின் வழிகாட்டியாக நம்பிக்கை நட்சத்திரமாக ஜொலிக்கும் டாக்டர் சாருமதி , சாதித்தேன் என்பதை விட, எத்தனை பேரை சாதிக்க வைத்திருக்கிறோம் என்பதே எங்கள் நிறுவனத்தின் சாதனை என்று தீராத் தாகத்தை வெளிப்படுத்தினார்.

கோவையில் GCT NATURES PRODUCT’S என்ற நிறுவனத்தை தன்னுடைய தனித்திறமையால் வளர்த்தெடுத்த டாக்டர் சாருமதியின் சாதனையை சொல்லி கொண்டே போகலாம்.

சேற்றிலும் சகதியிழும்வளர்ந்து வந்த பூக்களும் கூட மனத்தை கொடுக்க தவறில்லை . அதேபோல தான் எத்தனையோ வலிகளையும் வேதனைகளையும் தாண்டி வந்த பெண்கள் இன்று சாதனை புரிந்து சரித்திர கதாநாயகிகளாக வலம் வந்து கொண்டிருக்கிறார்கள்.

“புதிது புதிதாக சிந்திக்கும் மனமே சந்திக்கும் சோதனைகளை கூட சாதனைகளாக மாற்றுகிறது.

கடந்த 2016 ம் ஆண்டு இவர் சமூக சேவைக்காக கௌரவ டாக்டர் பட்டம் பெற்றுள்ளார்.

“தன்னம்மிப்பிக்கையுடன் எதிர் காலத்தை எதிர் கொள்ளுங்கள் எதிர் வரும் காலம் உங்கள் உங்கள் சாதனைகளால் போற்றப்படும்”…!

வாழ்கின்ற வாழ்க்கை எந்த அளவுக்கு மதிப்பு வாய்ந்தது என்று தீர்மானிப்பது உருண்டு ஓடும் வருடங்கள் அல்ல,  நாம் செய்கின்ற செயல் தான்.

மார்ச் 8- உலக மகளிர்தினம் என்பது “பெண் குலத்தின் சாதனை திருநாள்”
சிந்தனைகளை செயலாக்க புறப்படுங்கள் .

புவி உங்களுக்கு புலப்படும் என்று கூறி பெண்களுக்கு தனது உலக மகளிர் தின வாழ்த்துகளை கூறினார் பெண்களின் நம்பிக்கை நச்சத்திரமாக ஜொலித்து கொண்டிருக்கும் சாதனை பெண் சாருமதி.

SHARE
சங்கர மூர்த்தி
தினகரன்,மாலைமுரசு பத்திரிகைகளில் 28 ஆண்டுகள் பணிபுரிந்த மூத்த பத்திரிகையாளர்.செய்திக்கு ...7373141119