விஞ்ஞானப்பூர்வமாக ஊழல் செய்த கலைஞர்…..! ராமதாஸ் பேச்சு..

நீர் நிலம் காற்று அகியவை மாசு அடைந்துள்ளது

0
137
Advertisement

வேலூர் மாவட்டம்

Advertisement

சோளிங்கர் பகுதியில் பாமக சார்பில்  கொள்கை விளக்க பொது கூட்டம் நடைபெற்றது .

இதில் அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் கலந்துகொண்டார் . அப்போது பேசிய அவர்   அன்றைய அரசியல் வாதிகள் தங்களுடைய சொத்துக்களை பொதுமக்களுக்கு அளித்தார்கள்,தற்போதுள்ள அரசியல் வாதிகள் ஊர் மக்கள் சொத்துக்களை கொள்ளையடிக்கிரர்கள் என்றார் மேலூம்  ஊழலில் புகழ் பெற்றவர்கள் கலைஞர் கருனாநிதியும் ஜெயலலிதா தான்.

ஊழலுக்காக  இந்திரா காந்தி  ஆட்சியில் சர்க்காரியா கமிஷன் அறிக்கை போட்டார்கள் இதில் விஞ்ஞானப்பூர்வமாக ஊழலை செய்தவர் கலைஞர். என்று அறிக்கை தாக்கல் செய்து வியந்தனர் அப்போது  சர்க்காரியா புகழ் கலைஞர் கருணாநிதி என பெயர் பெற்றவர். என்றார்

தற்போது உள்ள அரசியல் கட்சி தலைவர்கள் யாருக்கும் நாட்டை ஆளும் தன்மை இல்லை,.

பாமக வின் தேர்தல் அறிக்கையை 45 சதவீதம் காப்பி அடித்தது திமுக கட்சியின் ஸ்டாலின்.

தமிழகத்தில் ஊழலை பற்றி பேச பாட்டாளி மக்கள் கட்சி தவிர எந்த கட்சிக்கும் தகுதி கிடையாது.

வேலுர் மாவட்டம் கருப்பு மாவட்டம் ,இங்குள்ள நீர் நிலம் காற்று அகியவை மாசு அடைந்துள்ளது விவசாயம் தொழில் அழிந்துவிட்டது அதை  பாட்டாளி மக்கள் கட்சி சரிப்படுத்தும் என்றார் ராமதாஸ்.

மேலும்  இந்த ஆண்டை உழல் ஆண்டாக அறிவித்தது பாட்டாளி மக்கள் கட்சி

SHARE
Rj suresh
வேலூர்