குப்பை வண்டியில் கொண்டுச் செல்லப்படும் முதியவர் பிணம்

குப்பை அள்ளும் வண்டியில்

0
152
Advertisement

வேலூர் மாவட்டம்

சோளிங்கரில் குடும்ப உறுப்பினர்கள் புறக்கணிப்பு காரணமாக பிச்சை எடுத்து வாழ்ந்த முதியவர் இறந்து போனார்.
அனாதைப் பிணமாக புதைக்க அவரது உடலை குப்பை அள்ளும் ரிக்‌ஷாவில் கொண்டு சென்றதைப் பார்த்துக் கொதித்த பொதுமக்கள் அதைப்பற்றி கோபத்துடன் கண்டனத்தைப் பதிவு செய்து வருகின்றனர்.
வேலூர் மாவட்டம் சோளிங்கர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜாராம் (70). கூலித் தொழிலாளியாக இருந்தார். வயதாகி மனைவியும் மறைந்ததால் பிள்ளைகளால் கைவிடப்பட்டு சோளிங்கர் பகுதியிலேயே பிச்சை எடுத்து வாழ்ந்து வந்தார்.
உடல்நலக் குறைவு காரணமாக யாரும் கவனிப்பாரின்றி கடந்த 27-ம் தேதி கிடந்த அவர் சாலையிலேயே உயிரிழந்தார். அவரது பிணத்தை கைப்பற்றிய சோளிங்கர் போலீஸார் அவரது மறைவு குறித்து அறிவிப்பு வெளியிட்டனர்.
அவரது உறவினர்கள் யாராவது இருக்கிறார்களா என்று விசாரணை நடத்தினர்.
சோளிங்கர் காவல் நிலையத்திற்கு வந்த முதியவர் ராஜாராமின் உறவினர்கள் ராஜாராம் உடலை அடக்கம் செய்ய தங்களுக்கு வசதி இல்லையென்று கூறி, அனாதைப் பிணமாகக் கருதி அடக்கம் செய்யும்படி தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதனையடுத்து அனாதைப் பிணமாக வழக்குப் பதிவு செய்த போலீஸார் ராஜாராம் உடலை சோளிங்கர் பேரூராட்சி ஊழியர்களிடம் அடக்கம் செய்ய ஒப்படைத்தனர்.
அந்த முதியோரின் உடலைப் பெற்ற பேரூராட்சி ஊழியர்கள் முதியவர் ராஜாராமின் உடலை குப்பை அள்ளும் வண்டியில் திறந்த நிலையில் அடக்கம் செய்ய சுடுகாட்டுக்கு சாலையில் எடுத்துச் சென்றனர்.
சோளிங்கர் அரசு மருத்துவமனையில் இருந்து சுடுகாடு வரை உடலைக் கொண்டு சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பேருராட்சியின் மனிதாபிமானமற்ற செயலைப் பலரும் கண்டித்து வருகின்றனர். ஒரு அமரர் ஊர்தி கூடவா இல்லாமல் போனது என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.
Advertisement
SHARE
Rj suresh
வேலூர்