பெற்ற தாய் உடலை அடக்கம் செய்ய பிச்சை எடுத்த சிறுவர்கள்.

மனதை கனமாக்கியது

0
68
Advertisement

திண்டுக்கல் மாவட்டம்

எரியோடு அருகே உள்ள மேட்டுப்பட்டியை சேர்ந்தவர் காளியப்பன்.
இவரது மனைவி விஜயா(40). இவர்களுக்கு மோகன்(14), வேல்முருகன் (13) என்ற மகன்களும், காளீஸ்வரி(9) என்கின்ற மகளும் உள்ளனர்.

கடந்த 9ஆண்டுகளிக்கு முன் காளியப்பன் இறந்து விட்டார்.
அதன்பின், விஜயா தன் பிள்ளைகளை கூலி வேலைக்கு சென்று வளர்த்துள்ளார்.

இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு விஜயாவிற்கு மார்பகப் புற்றுநோய் இருந்த நிலையில், அதற்கான சிகிச்சை மேற்க்கொள்ள மதுரை அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.

அங்கு சில நாட்கள் தங்கி சிகிச்சை பெற்று திரும்பியவருக்கு புற்றுநோய் தாக்கம் குறைந்ததாக இல்லை.

அதனால், திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் மீண்டும் சிகிச்சைக்காக சேர்ந்தார். இந்நிலையில், நேற்று சிகிச்சை பலனின்றி இறந்தார். இவருடன் உறவினர்கள் யாரும் இல்லாமல் குழந்தைகள் மட்டுமே இருந்துள்ளனர்.

மருத்துவர்கள் தாய் இறந்த செய்தியை உறவினர்களிடம் கூறி மருத்துவமனைக்கு வர சொல்லியிருக்கிறார்.

சிறுவர்கள் தங்கள் உறவினர் ஒவ்வோருவருக்கும் தொடர்பு கொண்டு அலைபேசியில் அழைத்துள்ளார்கள்., யாரும் வராத நிலையில் ஊருக்கு சென்று அம்மாவின் உடலை பெற்று நல்லடக்கம் செய்யுமாறு கதறி அழுது அழைத்துள்ளார் யாரும் வர மறுத்ததால் மருத்துவமனை வந்த சிறுவர்கள் அருகில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகள்., நோயாளிகளின் உறவினர்களிடம் தங்கள் தாயாரை அடக்கம் செய்ய உங்களால் முடிந்த உதவி செய்யுங்கள் என அழுதபடியே பிச்சை கேட்டுள்ளனர்.

சிறுவர்களின் செயலை கண்டு அருகில் இருந்தவர்கள் அழுதபடியே சிறுவர்களுக்கு பணம் கொடுத்துள்ளனர்.

அதன்பின், தன் தாயாரின் உடலை அடக்கம் செய்து விட்டு ஊர் சென்ற சிறுவர்களை பார்த்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர்கள் கண்ணீர் விட்டது பார்ப்பவர்கள் மனதை கனமாக்கியது.

Advertisement
SHARE
sm muthukumar
பரமக்குடி