ராணிப்பேட்டையில் இலவச அன்னதான வங்கி தொடக்கம்

0
47
Advertisement

வேலூர் மாவட்டம்

ராணிப்பேட்டை நகராட்சி ‌முத்துக்கடை பேருந்து நிலையம் அருகில் அதே பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர்  அருன்குமார் என்பவர் தனது நீண்ட நாள் கனவை நிறைவேற்றும் வகையில் சுமார் 1லட்சம் மதிப்பிலான அன்னதான வங்கியை பொதுமக்களுக்கு அர்ப்பணிப்பு  செய்தார்.
இந்த அன்னதான வங்கியில் ‌உணவு பொருட்கள், புத்தகம் , ஆடைகள், பழவகைகள் உட்பட்ட பல்வேறு வகையான பொருட்களை சேகரித்து இதில் வைக்கப்படும்.
பொதுமக்கள் தங்களுக்கு என்ன தேவையோ அதை இலவசமாக எடுத்துக்கொள்ளலாம். இந்த இலவச அன்னதான வங்கிக்கு சமூக அக்கறை கொண்ட எவரும் தங்களால் இயன்ற அளவு பொருட்களை  வைக்கலாம் தேவைப்படுவோர் யார் வேண்டுமானாலும் உணவு, புத்தகம்,  ஆடைகளை எடுத்துக்கொள்ளும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இந்த சேவை ராணிப்பேட்டை பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Advertisement
SHARE
Rj suresh
வேலூர்