உயிர் காக்கும் உணவு….விஷமாகுமா

தயிருடன் கோழிக்கறி, மாமிசம், வாழைப்பழம்

Advertisement

உயிர் காக்கும் உணவு…உடல் வளர்க்கும் உணவு….

Advertisement

இந்த உணவுப்பொருள்கள் எல்லாம், ரசாயன வேதிப்பொருட்களின் ஆதிக்கத்தின் பிடியில் விஷமுள்ள உணவாகவும் மறிவிட்டது.

மனிதகுலத்தின் உழைப்பு எல்லாம் மருத்துவமனையில் சேர்க்கப்படும் அவலத்தை நமது “தமிழ்செய்தி” தொடர்ந்து எச்சரிக்கை செய்து வருகின்றது.

ரசாயன வேதிப்பொருட்களின் விஷம் ஒருபக்கம் இருக்க…!
எந்த உணவுகளை, எந்தஉணவுடன் சேர்த்து உண்டால்…! என்னன்ன பக்கவிளைவுகளை உண்டாக்கும் என்பது பற்றிய விழிப்புணர்வு பலருக்கும் கிடையாது.

சில உணவு வகைகளை சில உணவோடு உண்ண நஞ்சாக மாறி உடலை வருத்தும். அதில் சில குறிப்பிட்ட உணவுகளை பற்றி தெரிந்துக்கொள்ளலாம்.

பால்:

பாலுடன் மீன், புளிப்புக் கனி வர்க்கங்கள், கொள்ளு, கம்பு, பயறு வகைகள், கீரை, முள்ளங்கி, உளுந்து கலந்துண்ண நஞ்சாகும்.

தயிர்:

தயிருடன் கோழிக்கறி, மாமிசம், வாழைப்பழம் போன்றவற்றை கலந்துண்ண நஞ்சாகும்.

முள்ளங்கி:

உளுந்து கலந்துண்ண நஞ்சாகும்.

மணத்தக்காளி:

திப்பிலி, மிளகு, தேன், வெல்லம் கலந்துண்ண நஞ்சாகும்.

தேன்:

தேனும் தாமரை வித்தும் கலந்துண்ண நஞ்சாகும். தேனுடன் சம அளவு நெய் கலந்துண்ண நஞ்சாகும்.

வெற்றிலை:

எண்ணெய் கலந்துண்ண நஞ்சாகும்.

கரும்பு:

தண்ணீர் கலந்துண்ண நஞ்சாகும்.

சாராயம்:

சர்க்கரை கலந்துண்ண நஞ்சாகும்.

மீன் பொரித்த எண்ணெயை வேறெதுக்கும் பயன்படுத்தக் கூடாது.

முக்கனிகளை சம அளவாக உண்ண நஞ்சாகும்

SHARE
சங்கர மூர்த்தி
தினகரன்,மாலைமுரசு பத்திரிகைகளில் 28 ஆண்டுகள் பணிபுரிந்த மூத்த பத்திரிகையாளர்.செய்திக்கு ...7373141119