தீர்ப்பு தேதி வரப்போகுது டும்…டும்….

0
267
Advertisement
சசிகலா முதல்வராக சட்டமன்ற உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்க பட்ட உடன்,விசாரனை முடிந்து வருடம் கடந்த வழக்கிற்கு தீர்ப்பு தேதி திடீரென அறிவிக்கப்பட்டது.
அதுபோல,18 சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதி நீக்க வழக்கு விசாரனை முடிந்து ஒத்திவைக்கப்பட்டது. இதற்கு பிறகு நடந்த டெல்லி சட்டமன்ற தகுதிநீக்க வழக்கில் விசாரனை முடிந்து தீர்ப்பே வந்துவிட்டது. ஆனால்…தமிழக தீர்ப்பு….

யானை வரும்பின்னே

ஓசை வந்து விட்டது முன்னே. அதிமுக அதிகார நாளேட்டில் பாஜக வை தாக்கி சித்ரகுப்தன் சிலிர்த்து எழுந்துள்ளார்.அதை,ஜெயக்குமாரும் ஆதரித்துள்ளார்.இதன் அர்த்தம்….
பிஜேபி எடப்பாடியை அரசை கைவிட தயாராகி விட்டது. வரும் ஆண்டு மே மாதத்தில்  மத்திய தேர்தலோடு தமிழக தேர்தலை நடத்த தயாராகி விட்டது. ஆறுமாதம் ஆளுநரின் நேரடி ஆட்சியை கொண்டுவர மேலிடம் முடிவு செய்துவிட்டது.
அதனால்,வரும் வாரத்தில் தீர்ப்பு வரும்,பெரும்பான்மை நிருபிக்க ஆளுநர் உத்தரவு உடனே வரும்.
ஆக,இந்த வாரம் பரபரப்பு வாரம். இந்த பரபரப்பில் காவிரி பிரச்சினை ஊடக வெளிச்சத்திலிருந்து மறையப்போகிறது.
காவிரி போயி ஆட்சி கலையப்போகிறது டும்…டும்…..
Advertisement
SHARE