கோவில் சொத்து கோவிலுக்கே..

இந்து முன்னணியினர்

0
70
Advertisement
Advertisement

இந்து அறநிலையத்துறையே வெளியேறு என வலியுறுத்தி வேலூர் பழைய பஸ் நிலையம் அருகே இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

வேலூர்:

கோவில் சொத்து கோவிலுக்கே, இந்து அறநிலையத்துறையே வெளியேறு என வலியுறுத்தி வேலூர் பழைய பஸ் நிலையம் அருகே உள்ள மண்டி வீதியில் இந்து முன்னணியினர் இன்று ஆர்ப்பாட்டம் செய்தனர்.

மாநகர ஒருங்கிணைப் பாளர் ஆதிமோகன் தலைமை தாங்கினார். மாவட்ட துணை தலைவர்கள் சீனிவாசன், தனசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கோட்ட பொருளாளர் பாஸ்கர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.

இந்து முன்னணியினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

SHARE
Rj suresh
வேலூர்