ஆசிரியர் திறன்மேம்பாட்டுப் பயிற்சி-ஸ்ரீ இராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி

ஸ்ரீ இராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி

Advertisement

ஸ்ரீ இராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி மற்றும் AICTE (All India Council
for Technical Education) புதுதில்லி இணைந்து Business Research and Data Analysis
for Social Science என்னும் தலைப்பில் ஆசிரியர் திறன்மேம்பாட்டுப் பயிற்சியை
நிகழ்த்திக் கொண்டிருக்கின்றது.

முனைவர் ஏ.எபினேசர்ஜெயக்குமார்

மேலாண்மையியல் துறையின் இயக்குநர் முனைவர்ஆர்.சித்ரா வரவேற்புரை நல்கினார். கல்விப்புல முதன்மையர் முனைவர் ஏ.எபினேசர்ஜெயக்குமார் அவர்கள் விழாவினை தொடங்கி வைத்து சிறப்புரை நிகழ்த்தினார்.

தொடக்கவுரையில் தொழில்நுட்ப பின்னணியில் ஏற்பட்டுள்ள பொருளாதார வளர்ச்சி,
பணமதிப்பு இழப்பீடு மற்றும் வியாபார சந்தையில் GST –யின் அங்கத்தையும் கோடிட்டு
காட்டினார்.

கல்லூரி முதல்வர் முனைவர் கு.கருணாகரன் அவர்களின் சிறப்புரையில்
ஆராய்ச்சி என்பது புதியதாகவும், சமூகத்திற்குப் பயனுள்ளதாகவும், தொழில்சார்ந்த
வியாபார சந்தைக்கு உதவும் வகையிலும் நிகழ வேண்டும் என்று குறிப்பிட்டார்.

மேலும்,ஸ்ரீ இராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி DELL EMC Data Analytics Laboratoryபோன்ற நிறுவனங்களுடன் ஏற்படுத்தியுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்
முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டினார்.

திறன் மேம்பாட்டின் முக்கியத்துவத்தைமேலாண்மையியற்புல முதன்மையர் முனைவர் வி.லதா அவர்கள் எடுத்துரைத்தார்.

விழாவினை மேலாண்மையியல் துறைப் பேராசிரியர்கள் சிறப்பாக
ஒருங்கிணைத்திருந்தனர்.

Advertisement
SHARE
சங்கர மூர்த்தி
தினகரன்,மாலைமுரசு பத்திரிகைகளில் 28 ஆண்டுகள் பணிபுரிந்த மூத்த பத்திரிகையாளர்.செய்திக்கு ...7373141119