ஈழத்தில் இந்து கோவில் இடிப்பிற்கு கண்டனம்!

41
658
Advertisement

ஈழத்தில் இந்து கோவில் இடிப்பிற்கு கண்டனம்!

நீண்ட காலமாக முடிவுக்கு வராமல் இருக்கும் பிரச்சினைகளில் ஒன்று நம் ஈழத்தமிழர்களின் உரிமை போராட்டம்.. ஈழத்தில் இந்து கோவில் இடிப்பிற்கு கண்டனம்!

அவர்களின் வாழ்க்கையே போராட்டமாக போனது அனைவரும் அறிந்த நிகழ்வு..

உரிமைகளும் சலுகைகளும் மறுக்கப்பட்டு வந்தவர்களுக்கு பக்தியும் மறுக்கப்படுகிறது.

சிங்களத்தவர்களின் தாக்குதல் மனிதர்களை தாண்டி கோவில்களின் மீது வந்து நிற்கிறது.

தமிழர்களின் பல இந்துக் கோவில்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டும், இடிக்கப்பட்டும் வருகிறது.

தற்போது அந்த வரிசையில் இடம் பிடித்திருப்பது இலங்கை மன்னார் மாவட்டம் வெள்ளாங்குளம் – தேவன் பிட்டி கோவில் 

இந்து மக்கள் கட்சி எதிர்ப்பு…

இந்து மக்கள் கட்சி நிர்வாகிகள் நேற்று காலை 10 மணிக்கு சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள இலங்கை தூதரகம்  சென்று இலங்கை துணை தூதரக அதிகாரி திரு கிருஷ்ணமூர்த்தி அவர்களை சந்தித்து பேசினார்கள்.

                                              

நவநீதன் ரமணி ராஜேந்திரன், ஜெயம் பாண்டியன், குருமூர்த்தி,  சோமுராஜசேகர், பிமல் ராஜ்,  சங்கரன் ஜி, திருசெந்தில் – நிரஞ்சன் உள்ளிட்ட நிர்வாகிகள் வந்திருந்தனர்.

கோரிக்கைகள்

இலங்கை மன்னார் மாவட்டம் வெள்ளாங்குளம் – தேவன் பிட்டி கோவில் இடிப்பு சம்பந்தமாக கண்டனம்

திரும்ப கோவில் கட்டி கொடுத்திட வழிவகை செய்ய வேண்டும்

மேலும் இலங்கையில் உடைக்கபட்ட .ஆக்கிரமிக்க பட்ட இந்து திருக்கோவில்கள் கட்டி கொடுக்கப்பட வேண்டும்

இலங்கை இந்து தமிழர்களுக்கு வாழ்வுரிமை – வழிபாட்டு உரிமை பாதிக்க கூடாது என கோரிக்கை விடுத்துள்ளனர்.

செய்திகள்: சங்கரமூர்த்தி, 7373141119

Advertisement
SHARE