நாட்டு சர்க்கரை மகத்துவங்கள்….கரும்பு ஆராய்ச்சி விஞ்ஞானி ரெஜீனா சாந்தி…

கருப்பாக இருப்பதெல்லாம் கெட்டது

Advertisement
Advertisement

பார்ப்பதற்கு டீசெண்டாக பளிச்சென்று இருப்பதால்  கடந்த அரை நூற்றாண்டுகளில் நமது வீடுகளில் நீங்காத இடத்தைப் பிடித்துக்கொண்டது.

வெள்ளைச் சர்க்கரை எனும் அஸ்கா அல்லது சீனிவெறும் இனிப்பு என்ற சுவை மட்டுமே இருக்கும் இந்த வெள்ளைச் சர்க்கரை என்றைக்கு  வந்ததோ, அன்றைக்கே நாம் நோயாளிகளாக மாற்றிவிட்டோம்.

நமக்கு ஏற்படும் எந்த நோயாக இருந்தாலும் அதற்கு அடிப்படை வயிறு, அதாவது ஜீரணம் கெடுவதுதான்.  இன்று நாம் அனுபவிக்கும் நோய்கள் உருவாவதற்கு மூல காரணங்களில் ஒன்றாக இந்த வெள்ளைச் சர்க்கரையைச் சொல்லலாம்.

இந்த வெள்ளைச் சர்க்கரை வருவதற்கு முன்னர் நாம் எதை பயன்படுத்திக்கொண்டிருந்தோம்…?

கரும்புச் சர்க்கரை (நா‌ட்டு‌ச் ச‌ர்‌க்கரை), வெல்லம், பனை வெல்லம் போன்ற இயற்கைத் தன்மை எந்த விதத்திலும் கெடாத இனிப்பை தான் பயன்படுத்தி வந்தோம்.

கரும்புச் சாறு பாகாகக் காய்ச்சப்பட்டு அவை குறிப்பிட்ட கொதிநிலை வரும்போது அதன் சத்துகளில் மாற்றம் ஏற்படுகிறது.

அச்சு வெல்லம், உருண்டை வெல்லம் என்று மாற்றம் அடைந்த பின்னர் பிரவுன் நிறத்தில் கிடைக்கும் பொருளே கரும்புச் சர்க்கரையாகும்.

இந்தக் கரும்புச் சர்க்கரையில் வெல்லத்தைக் காட்டிலும் உடலுக்குஆரோக்கியத்தை வழங்கக் கூடிய அனைத்துச் சத்துகளும் உள்ளன. மேலும் அது உடலில் தேங்கும் கழிவுகளை வெளியேற்றும் செயலையும் செய்கிறது.

நாட்டு சர்க்கரையின் மகத்துவத்தை பற்றி….

naattu sakkarai

கோவையில் உள்ள இந்தியா கரும்பு ஆராய்ச்சி கழக விஞ்ஞானி ரெஜீனாசாந்தி  சொல்வதைக் கேளுங்கள்:

கரும்புச் சாற்றில் உள்ள கனிமச் சத்துகள் கரையக்கூடிய வகையைச் சார்ந்தவை. அதனால் அவை நமது உடலில் எளிதில் ஜீரணம் அடைகிறது. அதுவுமில்லாமல் கரும்புச் சாற்றில் உள்ள உப்புகளும், கனிமங்களும் நமது வயிற்றில் சுரக்கும் ஜீரண நீரில் உள்ள உப்புகளையும் கனிமங்களையும் ஒத்திருக்கிறது.

அதனால் அவை உடலுக்கு மிகுந்த ஆரோக்கியத்தைத் தருகிறது என்கிறார் கரும்பு ஆராய்ச்சி விஞ்ஞானி சாந்தி…!

மேலும் உடலில் நோயை உண்டு பண்ணும் அமிலத் தன்மையை வெளியேற்றி ஆரோக்கியத்தை வழங்கும் காரத் தன்மையை வழங்கிறதாம்.

நாட்டு சர்க்கரையின் தரம் பார்த்து வாங்க வேண்டும்…..!

கருப்பாக இருப்பதெல்லாம் கெட்டது. வெளுப்பாக இருப்பதெல்லாம் நல்லது என்ற நினைப்பு நம்மை வட்டு முதலில் ஒழிய வேண்டும்.
 

SHARE
சங்கர மூர்த்தி
தினகரன்,மாலைமுரசு பத்திரிகைகளில் 28 ஆண்டுகள் பணிபுரிந்த மூத்த பத்திரிகையாளர்.செய்திக்கு ...7373141119