மனஅழுத்தத்தை குறைக்கும் 4 உணவுகள்..!

0
157
மனஅழுத்தத்தை குறைக்கும் 5 உணவுகள்..!
Advertisement

மனஅழுத்தத்தை குறைக்கும் 4 உணவுகள்..!

Advertisement

தற்போது உள்ள நவீன காலகட்டத்தில் சிறு குழந்தைகள் கூட மன அழுத்தத்தை சந்திக்கின்றனர்.

முன்பு இருந்த வாழ்க்கை முறையில் குடும்ப உறவுகளுக்குள் இருந்த நெருக்கத்தின் காரணமாக,

நமது பிரச்சினைகளை வீட்டில் உள்ளவர்களிடம் பகிர்ந்து கொண்டதால் நிம்மதியான வாழ்க்கையை வாழ்ந்தனர்.

தற்போது டச் மொபைல் வந்தவுடன் உறவுகளுக்கிடையே டச் இல்லாமல் போனது தான் உண்மை..

அதனால் மற்றவர்களிடம் பேசி பழகும் பழக்கமே மாறிவிட்டது. இதனால் தற்போது உள்ள இளைய தலைமுறையினர் தான் மன அழுத்தத்தால் அதிகமாக பாதிக்கப்படுகின்றனர்.

இதனை  எளிமையாக சரி செய்யும் முறை தான் கீழ்கண்ட உணவு முறைகளை பின்பர்றுவது…

  1. பச்சைக் காய்கறிகள்

                                     

பல ஐ.டி கம்பெனிகளில் ‘கிரீன் ரூம்’ என்றிருக்கும்.

மிகவும் ஸ்ட்ரெஸ்ஸாக இருப்பவர்கள் சிறிது நேரம் பச்சைக் கலரை பார்த்தால் மனது ரிலாக்ஸாகும் என்பதற்காக இந்த ரூம்.

அதுபோலதான் பச்சை நிறக் காய்கறிகளும்.. கீரை வகைகள், ப்ராக்கோலி, அவகாடோ, வெண்டை ஆகியவற்றில்,

அதிகமாக ஃபோலிக் ஆசிட்  (வைட்டமின் பி9) இருக்கிறது. இது மூளையை புத்துணர்ச்சியாக வைத்து உற்சாகமாகச் செயல்பட  உதவுகிறது.

நீங்கள் ‘ஷார்ட் டெம்பர்’ பேர்வழி என்றால் உங்களது டென்ஷனை குறைக்க இவை உதவும்.

  1. சாக்லெட்ஸ்

                                                   

சாக்லெட்டுகளில் ”ட்ரைப்டோஃபன்”  அதிகம் உள்ளது. இது உங்களை  ஃபீல் குட்டாக வைத்திருக்க உதவும்.

நாம் நலமாக மகிழ்ச்சியாக இருக்கிறோம் என்பதை உணர உதவுவது சொரட்டோடின் என்ற ஒரு வகை ஹார்மோன் தான்.

அதனை அதிகப்படுத்த உதவுவது இந்த ‘ட்ரைப்டோஃபன்” !  இவை வாழைப்பழம், முட்டை இவற்றிலும் அதிகம் உள்ளது.

மேலும் இவைகளை உண்ணும்போது உங்களுக்கு நிம்மதியான தூக்கமும் கியாரன்டி!

  1. தயிர்

                                                   

சிலர் செரிமானப் பிரச்னைகளாலே மிகவும் அப்நார்மலாக இருப்பார்கள். தயிரில் ”ப்ரோபயோட்டிக்” என்று சொல்லப்படும் குட் பேக்டீரியா உள்ளது.

இது நல்ல செரிமானத்திற்கு உதவுகிறது.

மேலும் சின்ன விஷயத்திற்குக்கூட ஓவராக எமோஷனலாகும் நபர்களுக்கு தினமும் உணவில் தயிரை சேர்த்துவர எமோஷனலை கட்டுப்படும்.

  1. பால்

                                                 

எதற்கெடுத்தாலும் சிலர் பயப்படுவார்கள்.

ஒன்றும் நடக்காமல் இருக்கும்போதே ஏதோ விபரீதம் நிகழப்போவதாக எண்ணி, டென்ஷன் ஆவார்கள்.

இந்த ”பேனிக் டிசார்டர்” க்கு பால் மிகவும் நல்லது. பாலில் உள்ள வைட்டமி டி உங்களை மகிழ்ச்சியாக இருக்க உதவுவதோடு பேனிக் டிசார்டரில் இருந்தும் மீட்டெடுக்கும்.

தகவல்கள்: மித்ரா

SHARE