சட்ட சபையில் இரண்டாவது நாளாக திமுக வெளிநடப்பு..!

52
488
சட்ட சபையில் இரண்டாவது நாளாக திமுக வெளிநடப்பு..!
Advertisement

சட்ட சபையில் இரண்டாவது நாளாக திமுக வெளிநடப்பு..!

Advertisement

குதிரை பேரம் வீடியோ விவகாரத்தைப் பற்றிப் பேச அனுமதி மறுத்ததைக் கண்டித்து, சட்ட சபையில் இரண்டாவது நாளாக திமுக வெளிநடப்பு..!

சட்டப்பேரவையில் இருந்து திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். உடன் கூட்டணிக் கட்சி உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்தனர்.

சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக சட்டப்பேரவை இரண்டாவது நாளாக இன்று காலை 10 மணிக்கு கூடியது.

பள்ளிக் கல்வி, உயர் கல்வி, இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை குறித்த மானியக்கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது.

இந்நிலையில் குதிரை பேரம் வீடியோ தொடர்பாக பேச அனுமதி மறுக்கப்பட்டதால் திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

இது தொடர்பாக ஸ்டாலின் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

”நேரமில்லா நேரத்தில் வீடியோ விவகாரம் குறித்து கேள்வி எழுப்பினேன். ஆனால், அனுமதி மறுக்கப்பட்டது.

நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதால் பேச அனுமதி இல்லை என்று சபாநாயகர் மறுத்துவிட்டார்.

1972 சட்டப்பேரவை விதிப்படி நீதிமன்றத்தில் இருக்கும் வழக்கு குறித்து கருத்து சொல்ல முடியாது. நீதிமன்றம் வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்வது குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை.

அதனால் தீர்ப்பு குறித்தோ, நீதிமன்ற செயல்பாடு குறித்தோதான் பேசக் கூடாது. ஆனால், ஊடக செய்திகளை அவையில் விவாதிக்கலாம் என்று கூறினேன்.

சம்பந்தப்பட்ட எம்.எல்.ஏ சரவணனும் பதில் அளிக்க முன்வரவில்லை. வீடியோ விவகாரம் குறித்து பேரவையில் பேச அனுமதிக்க வேண்டும்

இல்லையென்றால் அதுகுறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்” என்று ஸ்டாலின் கூறியுள்ளார்..

SHARE