என்னடா இது காஜல் அகர்வாலுக்கு வந்த சோதனை..! டிஜிட்டல் இந்தியாவின் சாதனை..?

41
490
என்னடா இது காஜல் அகர்வாலுக்கு வந்த சோதனை..! டிஜிட்டல் இந்தியாவின் சாதனை..?
Advertisement

என்னடா இது காஜல் அகர்வாலுக்கு வந்த சோதனை..! டிஜிட்டல் இந்தியாவின் சாதனை..!

Advertisement

தமிழக அரசு விநியோகிக்கும் ஸ்மார்ட் ரேஷன் கார்டில் குடும்பத்தலைவி ஒருவரின் படத்துக்குப் பதிலாக, என்னடா இது காஜல் அகர்வாலுக்கு வந்த சோதனை..! டிஜிட்டல் இந்தியாவின் சாதனை..?

நடிகை காஜல் அகர்வாலின் புகைப்படம் மாறி இடம் பெற்றுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் ஓமலூர் வடக்கு தாலுகா ஆர்.சி.செட்டிபட்டி காமலாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சரோஜா. இவர் ஸ்மார்ட் ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்திருந்தார்.

ஆனால் அவருக்கு விநியோகிக்கப்பட்ட ஸ்மார்ட் ரேஷன் கார்டை பார்த்து அதிர்ந்து போனார்.

ஏனெனில், குடும்பத்தலைவர் புகைப்படம் இருக்க வேண்டிய இடத்தில் சரோஜாவின் படத்துக்கு பதிலாக நடிகை காஜல் அகர்வால் படம் மாறி இடம் பெற்றிருந்தது.

இது தொடர்பாக வட்ட வழங்கல் துறையினரிடம் சரோஜாவின் குடும்பத்தினர் புகார் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே காஜல் அகர்வால் புகைப்படத்துடன் கூடிய ஸ்மார்ட் ரேஷன்கார்டு வாட்ஸ் அப் போன்ற சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

ஸ்மார்ட் ரேஷன் கார்டு விண்ணப்பித்தலே மிகப்பெரிய பணிச்சுமையாக அதுவும் பாமர மக்களுக்கு சவாலாக இருக்கும் நிலையில்,

அதில் ஒரு திருத்தம் மேற்கொள்வது என்றால் அது இன்னமும் சிரமமான சவாலாகிவிடுகிறது.

எனவே, இது போன்ற தவறுகளை தவிர்க்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

டிஜிட்டல் இந்தியா என்ற பெயரில் நாம் இன்னும் என்னவெல்லாம் பார்க்கப் போகிறோமோ..?

செய்திகள்: ரோகிணி

SHARE