சிறு சேமிப்பு திட்ட விழிப்புணர்வு முகாம்…ஈஷா யோகா

ரத்தசோகை தடுப்பு முகாம்

Advertisement

ஈஷா யோகா

Advertisement

ஈஷா அவுட்ரீச் மற்றும் கோவை தபால் துறை இணைந்து ஈஷா யோகா மையத்தின் சுற்றுவட்டாரகிராம மற்றும் பழங்குடியின கிராம மக்களுக்கு சிறுசேமிப்பு பற்றிய விழிப்புணர்வு மற்றும் சேமிப்புகணக்கு துவங்கும் முகாம் நடத்தியது.

இந்நிகழ்ச்சி பிப்ரவரி 25ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை
ஈஷா யோகா மையத்தில் நடந்தது.

இந்நிகழ்ச்சியில் ஈஷா யோகா மையத்தின் ஸ்வாமி சிதம்பராஅவர்கள், கோவை மண்டல தபால் துறையின் அசிஸ்டன்ட் சுப்பரின்டென்ட் திரு P. சாய்ராம் அவர்கள், நிகழ்ச்சியில் மடக்காடு முன்னாள் கவுன்சிலர் திரு ஷண்முக சுந்தரம் அவர்கள், ஈஷாயோகா மையத்தின் திரு விஜயகுமார் அவர்கள், மடக்காடு சமூக சேவகர் திருமதி சசி அவர்கள்கலந்து கொண்டனர்.

சாடிவயல், சிங்கபதி, கல்கொத்திபதி, நல்லூர்ப்பதி, முல்லாங்காடு, தானிக்கண்டி, மடக்காடு,பட்டியார்க்கோவில்பதி, பச்சைவயல்பதி, ஆத்தூர் உள்ளிட்ட கிராம மக்கள் இந்நிகழ்ச்சியில்கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் கிராம மக்களுக்கு சேமிப்பு கணக்கு துவங்கும் முக்கியத்தும் பற்றியும், சேமிப்புசெய்வதன் முக்கியத்துவம் பற்றியும் விவரிக்கப்பட்டது.

2011ம் ஆண்டு முதல் ஈஷா அவுட்ரீச் சார்பில் ஈஷா யோகா மையத்தின் சுற்று வட்டார கிராமத்தின்பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டுவருகிறது.

இவ்வருடம் சுமார் 60 மாணவர்கள் இந்த உதவித் தொகை பெற்று கல்வி பயின்றுவருகின்றனர். இதில் 12 பேர் பள்ளி படிப்பிற்கான உதவித்தொகையும், 41 மாணவர்கள் கல்லூரிபடிப்பிற்கான உதவித்தொகையும், 7 மாணவர்கள் பாலிடெக்னிக் (தொழிற்கல்வி )க்கான
உதவித்தொகையும் பெற்றனர்.

இவர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை நடந்த சிறுசேமிப்பு விழிப்புணர்வு முகாமில் ஈஷா அவுட்ரீச்சார்பில் சேமிப்பு கணக்கு துவக்கி வைக்கப்பட்டது .

திரு P. சாய்ராம் அவர்கள் பேசுகையில்

"நம் வாழ்க்கை முறையில் 3 முக்கியமான செலவுகள் இருக்கிறது. அவை படிப்பு, திருமண செலவு,மருத்துவ செலவு ஆகும். நமக்கு பண தேவை வரும் போது நம் சேமிப்பு நமக்கு கை கொடுக்கும்",
என்றும், சிறு சேமிப்பு செய்ய அரசாங்கத்தினால் உருவாக்கப்பட்டுள்ள செல்வ மகள் சேமிப்புதிட்டம், பிரதம மந்திரியின் விபத்து காப்பீட்டு திட்டம் , ஆயுள் காப்பீட்டு திட்டம், உள்ளிட்ட பலதிட்டங்கள் பற்றியும் விளக்கினார்.

ஈஷா அவுட்ரீச்:

ஈஷா அவுட்ரீச், ஈஷா யோகா மையத்தின் சுற்றுப்புற கிராமவாசிகளின் நல்வாழ்விற்காக பல்வேறுநலத்திட்டங்களை நடத்தி வருகிறது. இலவச மருத்துவம் , இலவச கண் சிகிச்சை முகாம்,பெண்கள்மற்றும் கர்ப்பிணி பெண்களுக்கு இலவச ரத்தசோகை தடுப்பு முகாம் போன்றவற்றை தொடர்ந்துநடத்தி வருகின்றது.

கிராமபுர குழந்தைகளுக்கு தரமான கல்வி வழங்கும் நோக்கத்துடன் ஈஷா
வித்யா பள்ளி செயல்பட்டு வருகிறது. பொருளாதார சூழ்நிலையால் கல்வியை தொடரசிரமப்படும் மாணவர்களுக்கு கல்வி உதவிதொகை வழங்கி உதவுகிறது.

SHARE
சங்கர மூர்த்தி
தினகரன்,மாலைமுரசு பத்திரிகைகளில் 28 ஆண்டுகள் பணிபுரிந்த மூத்த பத்திரிகையாளர்.செய்திக்கு ...7373141119