சிட்கோ” தொழிற்பேட்டை என்பது வணிக வர்த்தக மையம் அல்ல

குறுந்தொழிலாளர்களுக்கு சோறு

Advertisement
Advertisement

தெற்கு ஆசியாவின் மிகப்பெரிய தொழிற்பேட்டை 1964ல், சென்னை அடுத்த அம்பத்தூரில் 1,250 ஏக்கர் பரப்பளவில் உருவாக்கப்பட்டது.

இந்த “சிட்கோ”  தொழிற்பேட்டையில், ஆட்டோ மொபைல் தொழிற்சாலைகள் டெக்ஸ்டைல்ஸ், இன்ஜினியரிங் கம்பெனிகள் என 1,600க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் உள்ளன. 1,500க்கும் மேற்பட்ட “டைனி’ எனப்படும் குறுந்தொழிற்சாலைகளும் உள்ளன.

இதன்படி, ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட கம்பெனிகள் தற்போது அம்பத்தூர் “சிட்கோ” தொழிற்பேட்டையில் இயங்கிவருகிறது.

இந்த “சிட்கோ” தொழிற்பேட்டையில், தற்போது ஏராளமான ஐ.டி., நிறுவனங்கள், கால் சென்டர் மற்றும் பி.பி.ஓ., நிறுவனங்கள் இங்கு கிளைகளை தொடங்கியுள்ளன.

எனவே 2010-ல் அம்பத்தூர் தொழிற்பேட்டையில் மண்டல போக்குவரத்து அலுவலகம் (ஆர்.டி.ஒ.,) அமைக்கப்படும் என அரசு அறிவிப்பு வெளியிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அம்பத்தூர் தொழிற்பேட்டைஉற்பத்தியாளர்கள் சங்கம் சார்பாக ஐகோர்ட்டில் வழக்கு பதிவு செய்து ஒரு இடைக்கால தடை உத்தரவு பெற்றனர்.

அந்த நீதிமன்ற உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:-

அம்பத்தூர் சிட்கோ தொழிற்பேட்டையில்”சிறு தொழில் உற்பத்தியாளர்களின் நலன்களுக்காகத் தான் சிறுதொழில் வளர்ச்சி கழக வளாகம் உள்ளது.

 ஆனால் இங்கு ஆர்.டி.ஓ., அலுவலகம் இயங்கினால், டீ கடைகள், ஜெராக்ஸ் கடைகள், உணவகங்கள் போன்றவைகள் வந்து விடும். இதனால், சிறு தொழில் உற்பத்தியாளர்களுக்கு மிகுந்த பாதிப்பு ஏற்படும்’ என்று அந்த இடைக்கால தடை உத்தரவில் உள்ளது….!

இங்கு ஓட்டல்கள் திறக்கவும் அனுமதி இல்லாத நிலையில், 150க்கும் மேற்பட்ட தள்ளுவண்டி, நடை பாதை உணவகங்கள், டீ கடைகள் முளைத்து இயங்கி வருகின்றன.

வணிக மையங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள், ஊழியர்கள், நடை பாதை கடைகளையே நம்ப வேண்டியுள்ளது.

இந்த நடைபாதை கடைகளுக்கும் சிட்கோ நிர்வாகத்திற்கும் நடைபெற்று வரும், ஆக்கிரமிப்பு அகற்றும் “கபடிக்….கபடி” 2003 – ம் ஆண்டு முதல் இன்று வரை சிறப்பாக நடைபெற்றது வருகிறது.

இந்த “கபடிக்…கபடி”  லாபத்திற்காக நடப்பதில்லை..? நஷ்டத்திற்கு நடத்தப்படுவதே….!

நஷ்டத்தில் போட்டி நடந்தால் தானே அந்த “கபடியில்” சம்பந்தப்பட்டவர்கள் நாளு காசு பார்க்க முடியும்…! ( இது எப்படியிருக்கு ).

இதற்கு நிரந்தர தீர்வுகிடையாதா…? என்று நாம் விசாரிக்கும் போது கிடைத்த விபரங்களில்….!

 பொருட்கள் உற்பத்திக்காக மட்டும்தான் “சிட்கோ தொழிற்பேட்டை”….! என்பதை மட்டும் தெளிவாக தெரிவித்தார்கள்…! அதாவது அம்பத்தூர் “சிட்கோ” தொழிற்பேட்டை என்பது வணிக வர்த்தக மையம் அல்ல என்பதே…!

சரி நமது சந்தேகம்…..? சிறுதொழில் வளர்ச்சிக்காக உருவாக்கப்பட்ட அம்பத்தூர் தொழிற்பேட்டை மையத்தில் தற்போது, கார் ஷாரூம்கள், துணிக்கடை விற்பனை மையங்கள் உள்ளதே அது எப்படி..?

சிறுதொழில் வளர்ச்சிக்காக அமைக்கப்பட்டுள்ள அம்பத்தூர் தொழிற்பேட்டையில் எந்தவொரு தொழில் துவங்க வேண்டுமென்றாலும் “சிட்கோ’ அனுமதி பெற வேண்டும். “சிட்கோ’ தான் இதனை கட்டுப்படுத்த வேண்டும், என்பது குறிப்பிடத்தக்கது….!

நமது சந்தேகம் என்னவென்றால்..?

அம்பத்தூர் தொழிற்பேட்டையில்  சிறு, குறு தொழிற்சாலைகள் உள்ள பகுதியில்…..!
மெர்சிடஸ் பென்ஸ், ஹுண்டாய், மாருதி போன்ற கார் ஷாரூம்கள், பாண்டலூன் போன்ற கலர் பிளஸ் போன்ற ஆயத்த ஆடை விற்பனை கடைகளும் உள்ளது….! 

இது எப்படி…!  

இந்த கேள்விக்கு நடைபாதை கடைகளை அற்றும் முன், கையேந்திபவனில் மதிய உணவை நிறைவேற்றிக் கொண்டிருந்த, ஐ.டி. யில் பணியாற்றும் கந்தசாமி நமது “தமிழ்செய்திக்கு” நச்சுனு தந்த பதில்:-

“வர்த்தகம் செய்ய  பெரிய நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கும் போது, இதற்கான சட்ட திட்டங்கள்….! பாதுகாப்பு எச்சரிக்கைகள்…! என்று பல விதமான நிபந்தனைகளுடன்…..! தகுந்த நெறிமுறைகள் படித்தானே அனுமதிக்கப்பட்டிருப்பார்கள்..???

தொழிற்பேட்டையில் பணிபுரியும் எங்களை போன்ற தொழிலாளர்களுக்கு ஓட்டல்கள் இல்லாத காரணத்தால் தானே,  கையேந்தி பவன்களை நாடுகின்றோம்…!

குறுந்தொழிலாளர்களுக்கு சோறு போடசுயத்தொழில் செய்யும் நடைபாதை கடைகளை, மாற்றியமைத்து அந்த சுயத்தொழிலுக்கான சட்ட நெறிமுறைகளை செயல் படுத்திவிட்டால்….! எல்லாம் சரியாகி விடும் சார்” என்றார் கந்தசாமி…

SHARE
சங்கர மூர்த்தி
தினகரன்,மாலைமுரசு பத்திரிகைகளில் 28 ஆண்டுகள் பணிபுரிந்த மூத்த பத்திரிகையாளர்.செய்திக்கு ...7373141119