கலங்கி நிற்பது…! கடன் பட்டவரா …? கடன் கொடுத்தவரா ..? கோடம்பாக்கத்துக்கு அஷ்டமச்சனி…

கடன் அன்பை கெடுக்கும்.....! இது ஒரு முதுமொழி.

Advertisement

ஜெய சாவு…..! சசிகைது…! ஆட்சியில் தடுமாற்றம்…! வருமான வரி ரைடு….!

Advertisement

தினகரன் கொக்கரிப்பு….!என்று அனுதினமும் அ.தி.மு.க…. பரபரப்பு செய்திகளை பார்த்தும்..! படித்தும்…கேட்டும்…சலித்துப்போன,தமிழ்ரசிக..வாசகநெஞ்சங்களுக்கு…!!!அன்புச்செழியனின்…பணபரிவர்த்தக வட்டி… குட்டி…! பரபரப்பு செய்திகள் காரணமாக சற்று சலித்துப்போன உள்ளத்தில் ஒரு புதுத்துணர்ச்சியை உண்டாக்கியது…!

உண்மையை மட்டுமே உரைக்கும் ஜால்ரா ஊடகங்கள்….! வழக்கம் போல் தங்களது அறிவுத்திறனை அவுத்து…. விட்டது..!

அன்பே இல்லாத அன்புச்செழியன் கொடுரன்…. இரக்கம் இல்லாதவர்…. கந்து வட்டி கரார் அன்பு….!

இப்படிபலவாறானதலைப்பில்செய்திகளைவியாபாரமாக்கி…ஊடகச்சந்தையில்.! தங்களின் நிறுவனத்தின் கல்லாவை நிறைத்து வருகிறார்கள்.

ஊடகங்களில் பணியாற்றும் ஊனமுற்ற நெறியாளர்கள்….!

எமது கோபத்துக்கு காரணம்?

கந்து வட்டி அன்புக்கு வக்காலத்து வாங்கு வதற்க்காக இல்லை…!
அதேபோல் அன்பு நல்லவர் என்று துதிபாடவுமல்ல..!

செத்து மண்ணில் மக்கிப்போனா ஜீ.வியின் சாவுக்கு அன்பு காரணம் என்று பழைய செய்தியை ஊடக… அறிவுஜீவிகள் நோண்டியது தான் காரணம்…!

என்னைப்போன்ற மூத்த பத்திரிக்கையாளர்களுக்கு தெரியும்…! ஜீ.வியின் பரிதாபமான சாவுக்கு என்ன காரணம் என்று.

ஜீ.விக்கு பணம் ஒரு பொருட்டல்ல….!

அவரின் உறவினர்கள் பாதியில் பணம்படைத்தவர்கள் அல்ல..! அதே போல் எவரும் பிச்சைக்காரனும் அல்ல..!

ஜீ.வியின் மரணம் குடும்ப மானப்பிரச்சனை…. இதில் எந்த குழப்பமும் இல்லை என்று மூடிவிட்ட சவப்பெட்டியை.

அன்பு என்பவரின் பெயரால் நோண்டினால் அதில் கந்துவட்டி  வராது….! ஜீ.வியின் குடும்பம் கவுரவ நாற்றம் தான் வரும்.

இதுதான் எமது கோபத்தை தூண்டியது.

ஒட்டு மொத் கனவுத் தொழில்சாலையின் ஜீவா நாடியாக இருந்து வரும் இந்த அன்பு யார்?

இவர் ஒன்றும் சண்முகம் செட்டியார், ஜீ.கே.மூப்பனார் போன்றவர்களின் பேரன் இல்லை…!

அஞசுகம் பெற்றேடுத்த திருமகன் போல் வெறும் கையில் தலைநகர் வந்து, தமிழகத்தின் எட்டுதிக்குகளையும் சுற்றி வலைத்தவரா? இல்லை…

காவிரி வழியாக வந்த வெள்ளித்திரை தாரகைக்கு வெண்சாமரம் வீசிய வம்சங்களின் வாரிசா? அல்லது காலிலாவது விழுந்து மீசையில் பட்ட மண்ணை எடுத்து கரைத்துக்குடித்தவரா?

அல்லது அங்கு மண்சோறு சாப்பிட்டாவரா….? அதுவும் இல்லையென்றால் அவர்களுக்கு மாமனா..? மச்சானா..? எதுவுமே இல்லை என்றால் ..? மானம்கெட்டு பணம் சேர்த்தவரா?

இப்படி எந்த விதமான அடிப்படை அரசியல் தகுதிகள் இல்லாமல் இத்தனை செல்வாக்கு அன்புச் செழியனுக்கு எப்படி வந்தது?

ராமநாதபுரம் மாவட்டத்தில் பொம்மனேந்தல் கிராமத்தில் சாதரணமான ஒரு ஆசிரியர் குடும்பத்தில் பிறந்தவர்தான் அன்புச் செழியன். அங்கிருந்து மதுரையில் குடியேறிய அவர், மதுரை, ராமநாதபுரம் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்களுக்கு சின்ன அளவில் பைனான்ஸ் செய்ய ஆரம்பித்தார். அதோடு, மதுரை பகுதியிலும் பெரிய அளவில் பைனான்ஸ் செய்து வந்தார்.

அப்போது, அவர் அதிமுக கட்சியிலும் இணைந்து செயல்பட்டு வந்தார்.
இது தான் இவரின் அரசியல் பிரவேசம்.

அந்த சமயத்தில் சுக்கிரதிசை சுற்றி வளைத்தது அதனால், வளர்ப்பு மகனின் நட்பும் கிடைத்துள்ளது. அவர் மூலம் பணத்தை வாங்கி வட்டிக்குக் கொடுத்து, தனது தொழிலை விரிவுபடுத்தியுள்ளார். அதன் பின்னர்தான் அவர் சென்னை வந்து சினிமா படங்களுக்கு பைனான்ஸ் செய்ய ஆரம்பித்துள்ளார்.

பணத்தை பணமாக்கும் தொழில்..! எனவே தனக்கு நம்பிக்கையாளர்களை நன்கு வைத்துக்கொண்டு தொழில் செய்தார்.

யாருக்கும் அன்பு வலியுறுத்தி பணம் கொடுப்பதில்லை அது அவரின் வேலையும்மில்லை இவரிடம் தான் அனைவரும் வழியவந்து வட்டிக்கு பணம் வாங்கியவர்கள்.

வட்டிக்கு பணம் வாங்கியவர்கள் எல்லாம் அடுத்த வேளை சாப்பாட்டிற்கே வழியின்றி தவித்வர்களா? என்பதுதான் கேள்வி?

அரசு வங்கிகளில் அத்தனை கன்டிஷன்களுக்கும்  கட்டுப்பாட்டு, கடன்காரனாகுவதை போல் தானே…!

அன்பு பைனான்சில் கடன் வாங்கி இருப்பார்கள்.கனவு தொழில் கடன்காரர்கள்.

சர்வ கட்சிகளின் முக்கிய புள்ளிகளின் பணம் அன்பு பைனான்ஸ்சில் தான் உள்ளது.
அவர்களது பணத்தை காக்க வேண்டிய முழுப்பொறுப்பும் அன்பையே சேர்ந்தது.

எனவே வெறும் கையில் முழம் போட நினைத்து பணத்தை வாங்கிக் கொண்டு ஏமாற்று பவர்களிடம் பணம் வசூலிக்கும் விதமே அலாதியானதாம்.

இதற்காகவே தனக்கு கீழே மதுரை பகுதியைச் சேர்ந்த அடியாட்களை வைத்திருந்தார். அவர்களில் மிக முக்கியமானவர் புரோட்ட   ஐய்யப்பன். புரோட்டோ மாஸ்டராக இருந்த அவர், பின்னாளில் தயாரிப்பாளராக உயர்ந்தார்.பின்னர் போலீசில் சிக்கி அடி உதை வாங்கினார்.இப்போது அவர் உயிரோடு இல்லை.

பணம் வசூலிக்க வேண்டிய தயாரிப்பாளரைப் பிடித்து சிறை வைக்கும் வேலையை ஐய்யப்பனிடம்தான் கொடுப்பாராம் அன்புச் செழியன்.

அவரிடம் சிக்கும் தயாரிப்பாளரைப் பிடித்து பொட்டுத் துணி கூட இல்லாமல் அந்த வீட்டிலேயே உட்கார வைத்துவிடுவாராம், ஐய்யப்பன்.

அப்படியும் அவரிடம் இருந்து பணம் வரவில்லை என்றால், தயாரிப்பாளர் வீட்டுப் பெண்களை உட்கார வைத்து பணத்தை வசூலித்துவிடுவாராம்.
இது போலீஸ் வட்டாரத்தகவல்.

கடன் அன்பை கெடுக்கும்…..! இது ஒரு முதுமொழி.

ஆனால் இன்று அன்பை கெடுத்த கடன்…..! அவரிடம் கடன் வாங்கியவர்களின் அறிவையும் சேர்ந்து கெடுத்துக் கொண்டிருக்கிறது.

மேலும் அன்புச்செழியனிடம்…. பல்லைக் காட்டி கைநீட்டி காசு வாங்கி “கடன் பட்டோர் நெஞ்சம் போல் கலங்கி நின்ற” கோடம்பாக்கம் கோல்மால் கடன்காரர்கள் எல்லாம் ஒன்று கூடி கனவு தொழிளுக்கே ஆப்படிக்க ஆலோசனை செய்து வருகிறார்கள்.

இன்று கனவுத் தொழிலுக்கு அன்பைப்போல் “கடன் கொடுத்தவர்கள் எல்லாம் கலங்கி” கல்லாவை மூடிவிட்டார்கள்….!

இது கோடம்பாக்கம் கனவுதொழிலுக்கு ஏற்பட்ட அஷ்டமச்சனி…!

சங்கரமூர்த்தி மூத்த பத்திரிகையாளர்

SHARE
சங்கர மூர்த்தி
தினகரன்,மாலைமுரசு பத்திரிகைகளில் 28 ஆண்டுகள் பணிபுரிந்த மூத்த பத்திரிகையாளர்.செய்திக்கு ...7373141119