சீரியல் இயக்குகிறார் சரயு மோகன்

100
615
சரயு மோகன்
Advertisement
Advertisement

பிரபல மலையாள நடிகை சரயு மோகன். 50க்கும் மேற்பட்ட மலையாள படங்களில் நடித்துள்ளார். தமிழில் காதலுக்கு மரணமில்லை படத்தில் அறிமுகமானார்

அந்தப் படம் வெளிவரவில்லை. அதன் பிறகு தீக்குளிக்கும் பச்சை மரம் என்ற படத்தில் நடித்தார். கடைசியாக சி3 படத்தில் சூர்யாவுடன் நடித்தார்.

தற்போது மலையாள திரைப்படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருந்தாலும் ஈரன் நிலவு என்ற தொடரில் நந்தனா என்ற கேக்டரில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

இந்த கேரக்டர் மலையாள பெண்களிடம் மிகவும் பிரபலம். சின்னத்திரை பெரிய திரையில் நடித்த சரயு மோகன் அடுத்து இயக்குனராக இருக்கிறார்.

தற்போது அவர் பச்ச என்ற குறும்படத்தை இயக்கி வருகிறார். இது பச்சை நிறத்தை பின்னணியா கொண்ட ஒரு வண்ணம் தொடர்பான படம்.

ஏற்கெனவே தான் நடிக்கும் படங்கள் சிலவற்றில் உதவி இயக்குனராக பணியாற்றி இயக்குனருக்கான பயிற்சியும் பெற்றிருக்கிறார்.

அடுத்து சின்னத்திரையில் சீரியலும், திரைப்படமும் இயக்கும் திட்டத்தில் இருக்கிறார்.

சின்னத் திரை சீரியலுக்கான ஸ்கிரிப்டை எழுதி வரும் சரயு விரையில் சீரியல் இயக்குனராகிறார். –

SHARE