சங்கரன்கோவில் மருத்துவ முகாம்

ரெட் கிராஸ் சொஸையட்டி

Advertisement
Advertisement

மோதி கேஸ் டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் சங்கரன்கோவில் மற்றும் இந்திய ரெட் கிராஸ் சொஸையட்டி சங்கரன்கோவில் இணைந்து…..

ஏஞ்சல் உயர்நிலைப் பள்ளி

சங்கரன்கோவில் வைத்து  மாணவ மாணவிகளுக்கு மருத்துவ முகாம் சமையல் எரிவாயு பாதுகாப்பு மற்றும் சிக்கன நடவடிக்கை குறித்து கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு இந்திய ரெட் கிராஸ் சொஸையட்டி சேர்மன் பி. அரிகர சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். திருமதி. அமலா அருணாசலம் உரிமையாளர் மோதி கேஸ் டிஸ்டிரிப்பூட்டர்ஸ், ஏஞ்சல் உயர்நிலைப் பள்ளி நிர்வாகி திரு. ஜான்சன், தலைமை ஆசிரியர் திரு . M. பெருமாள் சாமி முன்னில வகித்தார்கள் .

மருத்துவ நிகழ்ச்சியை காவல் துணை கண்காணிப்பாளர் திரு .R . இராஜேந்திரன் அவர்கள் துவக்கி வைத்தார்கள். 127 மாணவ மாணவியர்களுக்கு கண் பரிசோதனை , இரத்த பரிசோதனை பிரிவு, காது மூக்கு தொண்டை மருத்துவ நிபுணர் திரு.G. ரெகுபதி , குழந்தைகள் நல சிறப்பு மருத்துவர் திரு. ப . வைகைக் கனி மருத்துவ பரிசோதனை செய்தார்கள் மருத்துவ பரிசோதனையில் கண்டறியப்பட்ட மருத்துவ குறைபாட்டிற்கு மேல் சிகிச்சைக்கு அரசு மருத்துவமனை செல்ல அறிவுரை வழங்கப்பட்டது.

சமையல் எரிவாயு பாதுகாப்பு மற்றும் சிக்கன நடவடிக்கை குறித்த நிகழ்ச்சியை குடிமை பொருள் வழங்கல் வருவாய் ஆய்வாளர் திரு. பெருமாள் தொடங்கி வைத்தார்.

மாணவ மாணவியர்கள் தங்களது சந்தேகங்களை கேட்டு தெளிவு பெற்றனர். திரு. கந்தசாமி நன்றியுரை ஆற்ற நிகழ்ச்சி இனிதே நிறைவு பெற்றது.

நிகழ்ச்சியில் இந்திய ரெட் கிராஸ் சொஸையட்டி செயலாளர் இராமச்சந்திரன் வைஸ் சேர்மன் கா. சக்திவேல் நிர்வாக குழு உறுப்பினர் திருமதி. திலகவதி செய்தி ஊடகப் பிரிவு செயலாளர் திரு. V.சங்கரநாராயணன் உறுப்பினர் சங்கர சிந்தாமணி, சேது கலந்து கொண்டார்கள்.

SHARE
சங்கர மூர்த்தி
தினகரன்,மாலைமுரசு பத்திரிகைகளில் 28 ஆண்டுகள் பணிபுரிந்த மூத்த பத்திரிகையாளர்.செய்திக்கு ...7373141119