மணல் கொள்ளை…! வண்டி வாகனங்கள் பறிமுதல்..

வாலாஜாப்பேட்டை வட்டாட்சியர்

0
127
Advertisement
Advertisement

இருவேறு இடங்களில் மணல் கடத்தலில் ஈடுப்பட்ட 3 பேர் கைது – 3 லாரிகள் 2 மாட்டுவண்டி, 1 டாடா ஏசி பறிமுதல்

வேலூர் மாவட்டம்

பொன்னையில் பொன்னை ஆற்றில் சட்ட விரோதமாக சிலர் லாரிகளில் மணல் அள்ளுவதாக வந்த ரகசிய தகவலின் பேரில் வாலாஜாப்பேட்டை வட்டாட்சியர் விஜயகுமார் தலைமையிலான வருவாய் துறையினர் அப்பகுதியில் திடீர் ரோந்து பணியில் ஈடுப்பட்டனர்.

அப்போது பொன்னை ஆற்றில் இருந்து நூதனமுறையில் சரக்கு லாரி போல்  மூன்று  லாரிகள் மூலம்  மணல் ஏற்றி கொண்டு வந்த லாரிகளை நிறுத்த முயன்றனர். ஆனால் மணல் கடத்தல்காரர்கள் லாரியை நிறுத்தாமல் வேகமாக ஓட்டி தப்பி ஓட முயன்றுள்ளனர்.

இதனை அடுத்து காரில் 10 கிலோ மீட்டர் தூரம் துரத்தி சென்று லாரியை மடக்கி பிடித்தனர். வருவாய் அதிகாரிகளை கண்ட கடத்தல் காரர்கள் லாரியை அப்படியே விட்டு விட்டு தப்பி ஓடினர். இதனை அடுத்து மூன்று லாரிகளையும் பறிமுதல் செய்த வட்டாட்சியர் லாரிகளை ராணிப்பேட்டை கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தார்.

இதே பேல் ராணிப்பேட்டை அடுத காரை பகுதியில் பாலாற்றிலிருந்து மணல் திருடிய விஜி,கோபி,சுரேஷ் குமார் அகிய முன்று பேர் கைது,2 மாட்டுவண்டிகள், 1 டாடா ஏசி பறிமுதல் ராணிப்பேட்டை போலீசார் நடவடிக்கை

SHARE
Rj suresh
வேலூர்