பாம்பன் பாலம் புதிப்பிக்க ரூ- 35 கோடி

103-ஆண்டுகள்

0
78
Advertisement

தூக்குப்பாலமும்… தரைவழி

ராமநாதபுரம் மாவட்டம், மண்டபத்தையும், ராமேஸ்வரம் தீவையும் இணைவதில் முக்கிய பங்கு வகிப்பது ரெயில் தூக்குப்பாலமும்., தரைவழி பாலமும் தான்.

அதிலும், தரைவழி பாலத்திற்கு முன்னதாக ரெயில் பாலம் அமைக்கப்பட்டதால் அதி முக்கியத்துவம் பெறுகிறது.

103-ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில், ரெயில் பாலத்தின் மையப் பகுதியில் கப்பல்கள், பெரிய படகுகள் கடந்து செல்லும் வகையில் மனித சக்தியால் இயங்கும் தூக்குப்பாலம் உள்ளது.

இந்த தூக்குப்பாலம் அமைக்கப்பட்டு நீண்ட காலமானதாலும்., அதனை இயக்குவதிலும் சிரமம் ஏற்படுவதாலும் அங்கு மின் மோட்டார் மூலம் இயங்கும் புதிய தூக்குப்பாலத்தை அமைக்க ரெயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

இதையடுத்து புதிய தூக்குப்பாலம் அமைக்க ரூ.35 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நேற்று ரெயில்வே துறையின் முதன்மை பொறியாளர்கள் இந்த பாலத்தை நேரில் ஆய்வு செய்வதற்காக வந்தனர். அவர்கள் “ஹெலிகாம்” கேமராவை பறக்கவிட்டு, பாலத்தை முழுமையாக படம் பிடித்தனர்.

இது குறித்து ரெயில்வே உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது,

இந்தியாவில் கடல், ஆறு ஆகியவற்றில் உள்ள பாலங்களை ஆய்வு செய்து அவற்றின் உறுதித்தன்மை குறித்து அறிக்கை சமர்பிக்க மத்திய அரசு இரயில்வே துறைக்கு உத்தரவிட்டுள்ளது.

இதையெடுத்து, தமிழகத்தில் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படும் பாம்பன் தூக்குப் பாலத்தின் உறுதித்தன்மை குறித்து ஆய்வு மேற்க்கொள்ளப்பட்டு வருகிறது.

இங்கு வருகின்ற ஜீன் மாதம் புதிய தூக்குப்பாலம் அமைப்பதற்கான பணிகள் தொடங்கும்.

இந்த பணிகள் ஆர்.வி.என்.எல் மூலம் மேற்கொள்ளப்பட உள்ளன. மாதிரி தூக்குப்பால வடிவமைப்பு, பிரெஞ்சு, ஸ்பெயின் நாட்டின் தொழில் நுட்ப வல்லுநர்கள் மூலம் மேற்க்கொள்ளப்படும். ஜீன் மாதத்தில் துவங்கி 3 மாதத்தில் நிறைவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

பணி நடைபெறும் போது ராமேஸ்வரம் வரும் ரெயில்கள் அனைத்தும் மண்டபத்துடன் நிறுத்தப்படும் என அவர் கூறினார்.

ராமேஸ்வரம் தீவுப்பகுதியில் பாதுகாப்பு காரணம் கருதி ஹெலிகாம் கேமரா பறப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பாம்பன் தூக்குப்பாலத்தின் மீது ஹெலிகாம் கேமரா பறந்ததை தொடர்ந்து உளவுத்துறையினர் விரைந்து வந்து இரயில்வே அதிகாரிகளிடம் விசாரித்தனர்.

அப்போது, முறையான அனுமதி பெற்று ஆய்வு மேற்க்கொள்ளப்படுவதாக அதிகாரிகள் பதிலளித்தனர்.

Advertisement
SHARE
sm muthukumar
பரமக்குடி