கோவை சட்டக்கல்லூரியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்வு

கோவை சிட்டிசன்ஸ் வாய்ஸ் கிளப்

Advertisement

சாலைவிதிகள் பற்றிய விழிப்புணர்வு

சாலை விபத்துகளின் எண்ணிக்கையில் தமிழகம் இரண்டாம் இடத்தில் இருக்கும் இத்தருணத்தில் சாலைவிதிகள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவது மிகவும் அவசியமானது.
அவ்வகையில் நேற்று கோவை சிட்டிசன்ஸ் வாய்ஸ் கிளப் நுகர்வோர் அமைப்பு மற்றும் சிஏஜி மற்றும் பெட்காட் அமைப்புகள் இணைந்து ரோடு சேப்டி எனும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியினை கோவை சட்டக்கல்லூரியில் மாணவர்கள் ஆசிரியர்கள், ஓட்டுனர்கள் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் பயன்பெறும் வகையில் ரோடு சேப்டி ஒர்க்சாப் நிகழ்வினை நிகழ்த்தியது.
Advertisement

இந்நிகழ்ச்சியினை சட்டக்கல்லூரி பிரின்சிபல் டாக்டர் கேஎஸ் கோபாலகிருஷ்ணன் அவர்கள் மாணவர்களுக்கு நன்மைபயக்கும் நோக்குடன் அனுமதியளித்து தனது முன்னுரையுடன் இனிதே துவங்கிவைத்தார்.

இந்நிகழ்ச்சியினை ஒருங்கிணைத்து நடத்திய பெட்காட் திரு.செல்வராஜ் அவர்கள் மற்றும் கோவை சிட்டிசன்ஸ் வாய்ஸ் கிளப் தலைவர் ஜெயராமன் அவர்கள் தங்களது விழிப்புணர்வு காட்சித்தொகுப்பினை காண்பித்து மாணவர்களுக்கு சாலைப்பாதுகாப்பு மற்றும் நெறிமுறைகளின் அவசியம் மற்றும் பாதிப்புகளை விளக்கியதோடு நுகர்வோர் சட்டம் மற்றும் அதன் உரிமைகளைப்பற்றியும் தெளிவுபடுத்தினார்.

சிஎஜி அமைப்பின் கவுதம் அவர்கள் சிஎஜி அமைப்பின் செயல்பாடுகள் மற்றும் மோட்டார் வாகனச்சட்ட புதிய மசோதாவாகிய எம்விஏ பில் பற்றி விளக்கினார். ஆர்டிஓ உதயகுமார் அவர்கள் மற்றும் ஆர்டிஓ குமரவேலு அவர்கள் சாலைபாதுகாப்பின் பயன்கள் மற்றும் விழிப்புணர்வு குறும்படங்களையும் காட்சிப்படுத்தி விளக்கினர்.
முக்கியமாக சாலைபாதுகாப்பு காவலர் பயிற்சியாளர் திரு.விநாயகமூர்த்தி அவர்கள் மாணவர்களிடம் தலைக்கவசத்தின் முக்கியத்துவம், வாகனங்கள் பயன்பாடு,எச்சரிக்கைவிளக்குகளைகவனித்தல்மற்றும்நடைமுறைபடுத்துதல், ஆகியவை விபத்துக்களை தவிர்க்கும் முக்கிய காரணிகள் எனவும் தலைக்கவசத்தின் பயன்பாட்டால் கோவையில் விபத்துக்களும் விபத்தினால் ஏற்படும் மரணங்களும் கனிசமாக குறைந்துள்ளது என சுட்டிக்காட்டினார்.
அவரது நகைச்சுவையான பேச்சில் மாணவர்கள் அனைவரும் ஊர்சாகமுடனும் ஆர்வமுடனும் கருத்துக்களை உள்வாங்கிக்கொண்டனர்.
சிடிசி மற்றும் டிஎன்எஸ்டிசி   நிறுவனத்திலிருந்தும், மாவட்ட நிர்வாக அதிகாரிகளும் கலந்து ஆதரவு அளித்தனர், மேலும் கோவை ஜிடி டிரைவிங் இன்ஸ்டியூட் திரு.உஜின் அவர்கள் வாகனங்கள் ஓட்டுதல் மற்றும் முந்திச்செல்லுதல், வண்டியை நிறுத்துதல் மற்றும் விபத்து ஏற்படும் காரணிகளை விளக்கி சுட்டிக்காட்டினார்.
சட்டக்கல்லூரியின் ஒருங்கிணைப்பாளர் திரு.பி.பிரியா அவர்கள் நன்றியுரை வழங்க, சிட்டிசன்ஸ் வாய்ஸ் கிளப் திரு ஜெயராமன் அவர்கள் தலைமையில் என்எஸ்எஸ் யூனிட் திரு.அம்மு, செகரட்டரி திரு.வி.ஏ.சண்முகம், ஒருங்கிணைப்பாளர் திரு.ஜெய்கிருஷ்ணன், பெட்காட் செகரட்டரி திரு.சென்னியப்பன் ஆகியோரின் ஒருங்கிணைப்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் மற்றும் விழிப்புணர்வு நிகழ்வு சட்டக்கல்லூரியில் இனிதே நடைபெற்றது.
இறுதியாக சட்டக்கல்லூரி மாணவ மாணவியரின் சந்தேகங்களுக்கு ஆர்டிஓ திரு.உதயகுமார் மற்றும் காவலர் திரு.விநாயகமூர்த்தி மற்றும் அதிகாரிகள் விளக்கமளித்து நிகழ்வு நிறைவுபெற்றது.

 

கோவை சிட்டிசன்ஸ் வாய்ஸ் கிளப் தொலைபேசி : 0422 2302527.
இமெயில்: citizensvoiceclub@gmail.com

C.M. Jayaraman  |   President  94446 34375, 0422 2302527

VA Shanmugam   | Secretary  9442107546

A Karuppiah  |   Treasurer  94430 41105

Jai Krishnan  R, |  Co-ordinator   98948 26029

SHARE
சங்கர மூர்த்தி
தினகரன்,மாலைமுரசு பத்திரிகைகளில் 28 ஆண்டுகள் பணிபுரிந்த மூத்த பத்திரிகையாளர்.செய்திக்கு ...7373141119