ரசாயன கழிவுகளில் இருந்து ஏரி, குளங்களை காக்க ஆராய்ச்சி

வேலூர் வி.ஐ.டி., பல்கலை சார்பில்

0
59
Advertisement

ராணிப்பேட்டை:

Advertisement

மத்திய அரசின் அறிவியல் தொழில் நுட்பத் துறையின் நிதியுதவியுடன் ரசாயன கழிவுகளில் இருந்து ஏரி, குளங்களை காக்க, வேலூர் வி.ஐ.டி., பல்கலை சார்பில், வேலூர் மாவட்டம், ராணிப்பேட்டை அடுத்த, புளியங்கந்தாங்கலில் ஆராய்ச்சி துவங்கியுள்ளது.

புளியந்தால்கல் ஏரியை சுற்றியுள்ள பகுதிகளில், 40க்கும் மேற்பட்ட தோல், ரசாயன தொழிற்சாலைகளின் கழிவுகள் ஏரியில் கலந்து மாசடைவதை தடுக்க, ஏரியை சுற்றி மரக்கன்றுகள் நட்டு, ஆராய்ச்சி செய்யப்படுகிறது.

முதற்கட்டமாக ஏரியை சுற்றிலும், 500 பென்டோரம், குல்முகல், அல்பீசியா, காட்டுவா, சவுக்கு மரக்கன்றுகள் நடப்படுவதை வாலாஜாபேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலர் வெங்கடாச்சலம் துவக்கி வைத்தார்.

இதில், வி.ஐ.டி., யின் கட்டுமான பொறியியல் பள்ளி டீன் சேகர், வயல் இயக்குனர் பாபு, உயிரி அறிவியல் தொழில் நுட்ப பள்ளி முதல்வர் கோதண்டன் ஆகியோர் பங்கேற்றனர்.

SHARE
Rj suresh
வேலூர்